கட்டளைக் கலித்துறை 687. | கூற்றடிக் கஞ்சி முறையோ | வெனக்குல நான்மறையும் | போற்றடிக் கஞ்சம் புகலடைந் | தேமுனைப் போலவைத்தாற் | சேற்றடிக் கஞ்ச வயற்காசி | நாத செருப்படிக்கும் | மாற்றடிக் குந்தொண்டர் வில்லடிக் | | | | | | | | |
கட்டளைக் கலிப்பா 688. | இல்லை யென்ப திலையோர் மருங்கிலே | யெவ்வ றங்களு முண்டோர் மருங்கிலே | கொல்லு கின்ற தெழுதருங் கூற்றமே | கூறு மாற்ற மெழுதருங் கூற்றமே | வில்லு மேற்றிடு நாணும்பொன் னாகமே | விடுக ணைக்குண்டு நாணும்பொன் னாகமே | மல்லன் மார்பின் மணிமுத்த மென்பதே | வாச மையர்க் கவிமுத்த மென்பதே. | | | | | | | |
பல்லுக்கு முத்து உவமை. நிரைத்த வரிசையாக வைத்ததை ஒத்த. முளரிக் கணையான் - தாமரைப் பூவாகிய பாணத்தையுடைய மன்மதன். பத்துத் திசைகளிலும் கணையை வரிசையாகத் தொடுத்தான். இனிமேல் அவன் தொடுத்தால் இவளுக்கு உய்தியில்லை. திகை - திசை. பத்துத் திக்கிலும் நிரைத்தான், இனிப் பதினோராவது திக்கு ஒன்றில்லையென்றும் ஒரு பொருள் தோற்றுகின்றது. திக்கு - கதி. மலருக்கு நட்சத்திரம் உவமை.
687. அகிலேசரே, யமனுடைய அடிக்கு அஞ்சித் தேவரீருடைய திருவடிகளைப் புகலடைந்தேம்; அடியேம் சாரூபம் பெற வைத்தால் பல அடிகளைத் தேவரீர் பெற்றதுபோல யாமும் பெறுதலினின்றும் தப்ப வழியில்லை. இது பழிப்பதுபோலப் புகழ்ந்தபடி.
கூற்றடி: 693. போற்றுகின்ற அடியாகிய கஞ்சம். உனைப் போல எம்மை வைத்தால்: சாரூபம் பெற வைத்தாலென்றவாறு. சேற்றின் அடியிலிருந்து தோன்றிய தாமரை. செருப்படி கண்ணப்ப நாயனார் தந்தது. மாற்றடி - பிரம்பினால் பாண்டியன் அடித்த அடி; மாறு - பிரம்பு. வில்லால் அடித்தவர் அருச்சுனன்.
688. ஓர் மருங்கில் இல்லை என்பது இலை - ஒப்பற்ற வலத்திரு இடையிலே இல்லையென்பது இல்லை; உண்டு என்றபடி; சிவபெருமானது வலப் பாகத்திலே மாத்திரம் இடை உண்டென்றார்; மருங்கு - இடை எதிர்
|