பக்கம் எண் :

508குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

கலிவிருத்தம்
689.
என்ப ணிக்கும் பணியென் றிரந்தபோ
தென்ப ணிக்கும் பணிதிக்கு மேக்கென்றார்
என்ப ணிக்கும் பணியா விருந்ததோர்
என்ப பணிக்குமின் பாமகி லேசர்க்கே.        
(91)

நேரிசை வெண்பா
690.
கேயூர மூரக் கிளர்தோ ளகிலேசர்
மாயூர மூருமொரு மைந்தற்குத் - தீயூரும்
அவ்வேலை யீந்தா ரடித்தொழும்பு செய்தொழுகும்
இவ்வேலை யீந்தா ரெமக்கு.    
(92)

மறுத்துணரும் வழி வாமபாகத்தின் இடையில் இல்லையென்பது உண்டென்ற பொருளும் தோற்றியது. ஓர் மருங்கிலே எவ்வறங்களும் உண்டு - இடப்பாகமாகிய ஒரு பக்கத்தில் எல்லா அறங்களும் அமைந்தன. உமாதேவியார் முப்பத்திரண்டு அறங்களும் வளர்த்தமையைக் கூறியது. எழுதருங் கூற்றமே கொல்லுகின்றது - எழுந்து வருகின்ற யமனே கொல்லப்படுவது. கூறு மாற்றம் எழுதருங் கூற்றமே - இறைவர் திருவாய்மலர்ந்தருளும் வார்த்தை எழுதுதற்கு அரிய வேதமே. வில்லும் ஏற்றிடும் நாணும் பொன்னாகமே - வில்லாக உள்ளதும் அதன்கண் ஏற்றிடும் நாணும் பொன்னாகமே; பொன் நாகம் - பொன்மலையாகிய மேரு, பொலிவுபெற்ற ஆதிசேடனாகிய பாம்பு. விடு கணைக்கு நாணும் பொன் ஆகம் உண்டு - விடுகின்ற அம்பாகிய திருமாலுக்கு நாணுகின்ற திருமகள் திருமார்பில் உள்ளாள். மல்லல் மார்பில் மணிமுத்தம் என்பதே - வளப்பமுடைய திருமார்பில் மணியாகவும் முத்தாகவும் இருப்பது என்பே; அது: பகுதிப் பொருள் விகுதி. ஐயர்க்கு வாசம் அவிமுத்தம் என்பதே; வாசம் - இருப்பிடம்; அவிமுத்தம் - காசி; என்பது - என்று சிறப்பிக்கப்படுவது.

    689. பணிக்கும் பணி என் என்று இரந்தபோது - தேவரீர் இடும் கட்டளை யாது என்று இரந்தபோது,. என் - அருள்செய்வது யாது? பணிக்கும் - பாம்புக்கும். பணிதிக்கு மேக்கு என்று - ஆபரணத்திற்கு மேலானதென்று. ஆர் - நிறைந்த. என்பு அணிக்கும் - என்பாகிய ஆபரணத்திற்கும். பணியா இருந்ததோர் என் பணிக்கும் - பணிந்து இருந்த எனது தொண்டிற்கும். (பி-ம்.) ‘பணியாயிருந்ததோர்’. இன்பாம் - உவப்பை அடைகின்ற. பணிக்கும் அணிக்கும் பணிக்கும் இன்பாம் அகிலேசர்க்குஎன்.

    690. கேயூரம் - வாகுவலயம். கிளர் - எழிச்சிபெற்ற. அகிலேசர்: எழுவாய். மாயூரம் - மயில். மைந்தன் - முருகக் கடவுள்; அ வேலை - அந்த வேற்படையை. இ வேலை - இந்தப் பணியை.