நேரிசை வெண்பா 693. | வேதத் துரகர் விரக ரகிலேசர் | பாதத் துரகப் பரிபுரத்தார் - நாதரிவர் | சேவடிக்கண் டாரே திறம்பிழைத்துத் தென்புலத்தார் | கோவடிக்கண் டாரே குலைந்து. | | | |
கட்டளைக் கலித்துறை 694. | குலைவளைக் கும்பழுக் காய்முழுத் | தாறு கொழுங்கமுகின் | தலைவளைக் கும்பொழிற் காசிப் | பிரான்றடங் கோட்டுப்பைம்பொன் | மலைவளைக் கும்புயத் தாண்மையென் | | | | | | |
ஆசிரியவிருத்தம் 695. | இடம ருங்கினின் மருங்கி லாதவவள் | குடியி ருக்கவு முடியில்வே | ்தியை ரிருத்தி வைத்துமதி | மோக மோகினியி னுருவமாய் | நடமி டுங்கிவடன் மேலும் வைத்துள | நயந்தொர் பிள்ளை பயந்தநீர் | வை மருவி னின்றுபிறர் | நாவ ளைக்கவிட மாகுமோ | | | | | | | |
693. வேதத்துரகர் - வேதமாகிய குதிரையை யுடையவர் (683). விரகர் - நுண்ணறிவையளிக்கும் தலைவர். (பி-ம்.) ‘விரகவகிலேசர்’. பாதத்து உரகப் பரிபுரத்தார் - திருவடிகளில் பாம்பாகிய சிலம்பை அணிந்தவர். சேவடிக் கண்டாரே - திருவடியைத் தரிசித்தவர்களே; திரிபு நோக்கிக் ககரம் மிக்கது. திறம் பிழைத்து - யமனது வன்மைக்குத் தப்பி. தென்புலத்தார் கோ - யமன்; அடி - தண்டம்; முன்னும், “கூற்றடி” (687) என்றார். அண்டார் - நெருங்கார், யம தண்டனை இல்லையென்றபடி.
694. பழுக்காய்த்தாறு - பாக்குக்குலை; ஆண்மை என் ஆம் - வீரம் என்ன பயனுடையதாகும். தெவ் வளைந்து - பகைவன் சூழ்ந்துகொண்டு; பகைவனென்றது மன்மதனை. கழைச்சிலை - கரும்பாகிய வில்லை. தன் படை வீடு - தமது படைவீடாகிய காசியை; 613, 648-ஆம் செய்யுட்களைப் பார்க்க. தன்னென்றது சிவபிரானை. தம்முடைய படைவீட்டைப் பகைவன் வந்து அமர்க்களமாகச் செய்வானெனின், இவர் ஆண்மை என்ன பயனுடையதாம்.
|