| குடமு டைந்ததெ னவானி னங்கண்மடி | மடைதி றந்துபொழி பாலொடும் | கொழும டற்பொதி யவிழ்ந்து கைதைசொரி | சோறு மிட்டணி திரைக்கையாற் | கடல் வயிற்றினை நிரப்பு கின்றசுர | கங்கை குண்டகழி யாநெடுங் | ககன நீள்குடுமி மதில்க ளேழுடைய | | | | | | | | |
பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் 696. | சரியோ டொழுகுங் கரவளையே சரக்கோ டொழுகுங் கரவளையே | தையற் கனமே தீவிடமே தவழுங் கனமே தீவிடமே | சொரிவ தடங்காக் கண்ணீரே துளிக்குந் தடங்காக் கண்ணீரே | துயரே வதித னந்தினமே சூரற் கழுத்தி னந்தினமே | கருகிப் புலர்ந்த நாவாயே கரைவந் திழியு நாவாயே | கண்க ளுறங்கா கழுநீரே கடலே கழியே கழுநீரே | அரிவை யிவளுக் குருகீரே யனத்தோ டுறங்குங் குருகீரே | அளியா ரிதழி வனத்தாரே யருளானந்த வனத்தாரே. | | | | | | | |
695. தோழி கூற்று.
இடமருங்கினில் - இடப்பாகத்தில். மருங்கு இலாதவவள் - இடையில்லாத உமாதேவியார். இவளொருத்தியென்றது கங்கையை. நடமிடு இங்கு இவளென்றது திருமாலாகிய மோகினியை. ஓர் பிள்ளை - மகாசாத்தர். நாவளைக்க - பேச; பழிகூற வென்னும் பொருளில் இங்கே வந்தது. இவ்வளவு பெண்களை மருவிய நீர் இவளையும் ஏற்றுக்கொண்டாற் பிறர் பழி கூறுவதற்கு என்ன காரணம் உள்ளது? பசுவின் மடிக்குக் குடம் உவமை; குடஞ் சுட்டு என்று இத்தகைய பசுக்கள் கூறப்படும். மடிமடை - மடியாகிய மடை. கைதை - தாழை. சோறு - தாழை மடலினுள்ளே இருக்கும் ஒரு பொருள்; உண்ணும் சோறெனவும் ஒருபொருள் தோற்றியது. பாலோடு சோறும் இட்டுக் கடல் வயிற்றினை நிரப்புகின்ற. குண்டு அகழியா - ஆழமான அகழியாக. ககனம் - ஆகாயத்தில். குடுமி - உச்சி. அகிலேசரே, நீர் நங்குலத்திருவை மருவின் பிறர்நாவளைக்க இடமாகுமோ? இஃது, ‘இப்பொழுது அவர் மிக்கது’ என்பதைக் குறிப்பித்தது.
696. தோழி கூற்று.
கரவளை சரியோடு ஒழுகும் - கைவளை சரியோடு நழுவும்; சரி - முழங்கைக்குமேல் அணிந்துகொள்ளும் ஒருவகை வளை. சரக்கோடு ஒழுகும் கரவளையே - பலவகைப் பண்டங்களோடு நீரீல் செல்லா நிற்கும் தோணியே. தையற்கு அனம் தீ விடமே - தலைவிக்குச் சோறு கொடிய
|