பக்கம் எண் :

512குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

சந்த விருத்தம்
697.
வனத்தினுமொர் பொற்பொதுமு கப்பினு நினைப்பவர் 
    மனத்தினுந டித்த ருள்செய்வார் 
சினக்கயல் விழிக்கடை கருக்கொள்கருணைக்கொடி 
    திளைத்தமரு மத்த ரிடமாம் 
நனைக்கமல நெக்குடை தரக்குடை துறைச்சுர 
    நதிக்கரையின் முட்டை கொலெனாக் 
கனத்தபரு முத்தினை யணைத்தன மினத்தொடு 
    களிக்குமவி முத்த நகரே.    
(99)

வேறு
698.
கருமுகில் வெளுப்பவற விருளுமள கத்தினிவள்
    கதிர்முலை முகட்டணைய வணைமீதே
வருகில ரெனிற்செவியி லொருமொழி சொலச்சமயம்
    வருகென வழைக்கினுடன் வருவார்காண்

விடமாயிற்று. தவழும் கனமே - வானத்தில் உலவும் மேகமே. தீவு இடமே - தீவுகளாகிய இடங்களே. சொரிவது அடங்காக் கண்ணீரே. தடங்காவிலே துளிக்கும் கள்ளாகிய நீரே; கா - சோலை; கள் - தேன். துயரே வதிதல் நந்தினமே - துயரத்தின்கண்ணே தங்குதல் பெருகினேம். சூரல் கழுத்தின் நந்து இனமே - சுழித்தலையுடைய கழுத்தைப் பெற்ற சங்கின் கூட்டமே; சூரல் - சுழித்தல்; “சூரலங் கடுவளி” (அகநா. 1). நாவும் வாயும் கருகிப் புலர்ந்த; புலர்ந்த - உலர்ந்தன; முற்று. கரையில் வந்து இழியும் நாவாயே; நாவாய் - ஓடம். கண்கள் உறங்கா - கண்கள் தூங்குதலைச் செய்யா. நீர் கழும் - நீர் அவற்றைக் கழுவும்; அழுவேனென்றபடி. கழுநீரே - கழுநீர்ப் பூக்களே. குருகீரே - பறவைகளே. இதழி வனத்தார் அளியார் - கொன்றை மலராலாகிய அழகிய மாலையைத் தாரார். ஆனந்த வனத்தார் அளியார்.

    697. வனத்தினும் - மயானத்திலும். பொற்பொது - பொன்னம் பலம். விழிக்கடையின்கண்ணே கருக்கொண்ட கருணையையுடைய கொடிபோல்வாள்; உமாதேவியார். அத்தர் - ஒரு பாதியையுடையவர்; அர்த்தரென்பது அத்தரென நின்றது. திளைத்த எனப் பெயரெச்சமாகப் பிரித்து, மருமத்த ரென்பதற்கு மார்பினை யுடையவரெனப் பொருள் கொள்ளலுமாம்; “பெண்ணுறு மார்பினர்” (தே. திருஞா.) நெக்கு - நெகிழ்ந்து. உடைதர - மலர. சுரநதி - கங்கை. அன்னம் முத்தை முட்டையென்று நினைத்து அணைத்தது (603). அவிமுத்தநகர் இடமாம் என்க.

    698. தோழி கூற்று.