| சுரநதி சுருட்டும்விரி திரைகளொரு முத்திமக | டுணைமுலை திளைக்குமவர் மணநாளின் | முரசொடு முழக்குகுட முழவென விரைக்கவளை | முரலுமவி முத்தநக ருடையாரே. | | | |
நேரிசை யாசிரியப்பா 699. | உடைதிரைக் கங்கை நெடுநதித் துறையின் | வலம்புரி யென்னவாங் கிடம்புரி திங்கள் | வெள்ளிவீ ழன்ன விரிநிலாப் பரப்பும் | பொன்வீ ழன்ன புரிசடைக் கடவுள்5. | முடவுப் படத்த கடவுட் பைம்பூண் | கறங்கெனச் சுழலுங் கால்விசைக் காற்றா | துமிழ்தரு குருதித் திரடெறித் தாங்குத் | திசைதொறுந் தெறித்த திரண்மணிக் குலங்கள் | | | | | | | |
அற - மிக. அளகம் - கூந்தல். கூந்தலின் கருமையை நோக்கக் கருமேகமும் வெண்மையாகத் தோன்றுமென்றாள். முகடு - உச்சி. அணை - படுக்கை. ஒரு மொழி சொல - பிரணவத்தை உபதேசிக்க. சமயமென்பது மரணசமயத்தை. இவளை அணைய வருகவென்பாருக்கு வாராரென்று சிலர் சொல்வரேல், இவள் உயிர் விடுஞ் சமயமெனின் தம் வழக்கத்தினின்றும் மாறாதிருப்ப, உடனே பிரணவோபதேசம் புரிய எழுந்தருளுவர். சுரநதி - கங்கை. அலைகளின் ஒலிக்குக் குடமுழவின் ஓசை உவமை. திரைகள் இரைக்க. வளை முரலும் - சங்குகள் முழங்கும். “பறைபடப் பணில மார்ப்ப” (குறுந். 15). மணம் புரிதல் மரபாதலின் குடமுழவையும் வளையையும் ஒருங்கே கூறினர்.
699. இறைவனைத் துதித்தல் அவனது அருளைப் பெறுதற்கு வழி என்பர்.
(அடி, 2-3) வலம்புரிச்சங்கம் சந்திரனுக்கு உவமை. இடம்புரி - இடத்தை விரும்பிய. வெள்ளிவீழ் - வெள்ளியாலாகிய விழுது; இது நிலாவுக்கு உவமை.
(3-4) நிலாப்பரப்பும் சடை, பொன்வீழன்ன சடை யென்க.
(5-11) சிவபெருமான் நடனம் புரிகையில் அவர் ஆபரணமாக அணிந்த பாம்பினிடத்திலிருந்து மணிகள் சிதறித் திசைக் களிறுகளின்மேல் தாக்க அவை வீரிட்டன.
(5) முடவு - வளைவு. படத்தையுடைய பூண்; பாம்பு.
(6) கறங்கு - காற்றாடி. கால்விசை - திருவடியின் வேகம்.
(7-8) மாணிக்கங்களுக்கு இரத்தத் துளிகள் உவமை.
|