| வானேறு கடுப்ப வெரிநிற் றாக்கலும்10. | கையெடுத் தெண்டிசைக் களிறும் வீரிடத் | தெய்வநா டகஞ்செய் வைதிகக் கூத்தன் | வரைபகப் பாயும் வானரக் குழாத்தொரு | கருமுக மந்தி கால்விசைத் தெழுந்து | பழுக்காய்க் கமுகின் விழுக்குலை பறித்துப்15. | படர்தரு தோற்றஞ் சுடரோன் செம்மல் | தெசமுகத் தொருவன் றிரண்முடி பிடுங்கி | விசையிற் பாய்ந்தென விம்மிதம் விளைக்கும் | தடமலர்ப் படப்பைத் தண்டலைக் காசிக் | கடிநகர் புரக்குங் கண்ணுதற் செல்வன்20. | வேம்புங் கடுவுந் தேம்பி ழி யாகச் | செஞ்செவி கைப்பயான் றெரித்த சின்மொழி | அஞ்செவி மடுத்தாங் களித்தன னதனால் | வேத்தவை வியப்ப விரைத்தேன் பில்கும் | | | | | | | | | | | | | | |
(9) வானேறு - இடி. வெரிநில் - முதுகில்.
(10) வீரிட - முழங்க.
(12-18) கமுகின் குலையைப் பறித்து இறக்கும் மந்திக்கு இலங்கையின் உத்தர கோபுரத்திலிருந்த இராவணனது பத்து முடிகளையும் பறித்து வந்த சுக்கிரீவன் உவமை.
(14) பழுக்காய் - பாக்கு.
(15) சுடரோன் செம்மல் - சூரியன் மகனாகிய சுக்கிரீவன். (16) தெசமுகத்தொருவன் - இராவணன். (17) விம்மிதம் - வியப்பு. (18) படப்பை - தோட்டக்கூறு. தண்டலை - சோலை. (20-21) என்னுடைய சொற்களை நோக்கும்போது கைப்புடைய வேப்பம்பழமும் கடுக்காயும் தேனைப்போல விரும்பத் தக்கனவாகு மென்றபடி. (20) வேம்புங் கடுவும்: தொல். செய். 112. (4-22) புரிசடைக் கடவுள், வைதிகக் கூத்தன், கண்ணுதற் செல்வன் சின்மொழியைச் செவிமடுத்து அளித்தனன். (23-4) வேத்தவை - அரசரது சபைகள். தேத் தமிழ் - தேன் போன்ற இனிமையையுடைய தமிழ். செந்நாப் புலவீர் - செவ்விய நாவையுடைய புலவர்களே.
|