பக்கம் எண் :

காசிக் கலம்பகம்515

தேத்தமிழ் தெளிக்குஞ் செந்நாப் புலவீர்
25.
மண்மகள் கவிகைத் தண்ணிழற் றுஞ்சப்
புரவுபூண் டிந்திர திருவொடும் பொலிந்து
முடிவினு முடியா முழுநலங் கொடுக்கும்
செந்நெறி வினவுதி ராயி னின்னிசைப்
பாத்தொடுத் தடுத்த பரஞ்சுடரை
30.
நாத்தமும் பிருக்க வேத்துமி னீரே.    
(101)

காசிக்கலம்பகம் முற்றிற்று.


    (28) செந்நெறி - முத்தியடைதற்கு உரிய வழியை.

    (30) நாத்தழும்பிருக்க ஏத்துதல்; “நாத்தழும் பிருப்பப் பாடாதாயினும்” (புறநா. 200: 10).

    (22-30) அகிலேசர் எனக்குக் கருணை செய்தமையால்; செந்நாப் புலவீர், நீர் பாத்தொடுத்துப் பரஞ்சுடரை ஏத்துமின்.