சகலகலாவல்லி மாலை
கட்டளைக் கலித்துறை 700. | வெண்டா மரைக்கன்றி நின்பதந் | தாங்கவென் வெள்ளையுள்ளத் | தண்டா மரைக்குத் தகாதுகொ | லோசக மேழுமளித் | துண்டா னுறங்க வொழித்தான்பித் | | | | | | |
701. | நாடும் பொருட்சுவை சொற்சுவை | தோய்தர நாற்கவியும் | பாடும் பணியிற் பணித்தருள் | | | | |
குறிப்பு: இப்பிரபந்தத்தின் பெயர். ‘சகல கலாவல்லிமாலை யென்னும் சரசுவதி தோத்திரம்’ என்றும் வழங்கும்.
700. வெள்ளையுள்ளம் - அறிவின்மையையுடைய மனம். வெண்டாமரையில் நீ எழுந்தருளியிருத்தல் போல அடியேனது வெள்ளையுள்ளத்திலும் எழுந்தருளுதல் தக்கதே யென்றபடி. அளித்துண்டான் - திருமால். அளித்து - பாதுகாத்து; உறங்க - தூங்கிக் கிடப்ப: செயலற்றிருப்பவென ஒரு பொருள் தோற்றியது, ஒழித்தான் - சிவபெருமான். பித்தாக - பித்தனாக. கண்டான் - பிரமன். அவனுக்கு உயர்வு தோற்றும்படி இதன் கண் சொல்லமைதி இருத்தல் காண்க. சகலகலாவல்லி - கலைமகள்.
701. தோய்தர - பொருந்த. நாற்கவி - வெண்பா முதலிய நான்கு; ஆசு மதுரம், சித்திரம், வித்தாரமென்னும் நான்குமாம். பாடும்பணி - பாடுகின்ற பணிவிடை; “பாடும் பணியே பணியாவருள்வாய்”
|