702. | அளிக்குச் செழுந்தமிழ்த் தெள்ளமு | தார்ந்துன் னருட்கடலிற் | குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ | லோவுளங் கொண்டுதெள்ளித் | தெளிக்கும் பனுவற் புலவோர் | | | | | | |
703. | தூக்கும் பனுவற் துறைதோய்ந்த | கல்வியுஞ் சொற்சுவைதோய் | வாக்கும் பெருகப் பணித்தருள் | வாய்வட நூற்கடலும் | தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் | | | | | | |
(கந்தரநுபூதி, 1). கொடியிலே மலர் இருத்தல் இயல்பாயிருப்ப, மலரிலே கொடியுள்ளதென்றது ஒரு நயம். பங்கயமாகிய ஆசனத்தில், ஐம்பாற் காடு - கூந்தலாகிய காடு; “குழற்கா டேந்துமிள வஞ்சிக் கொடியே” (62).
702. அளிக்கும் - நின்னால் அருளப்பெறும். தமிழாகிய தெளிந்த அமுதத்தை நிறைய உண்டு; “தித்திக்குந் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின் மேலான, முத்திக் கனியேயென் முத்தமிழே” (தமிழ்விடு. 69). குளித்து உண்ணுதல் முறையாக இருப்ப, உண்டு குளித்தலை விரும்பியது ஒரு நயம்; ஆர்ந்தென்பதனை ஆரவென்னும் எச்சத்தின் திரிபாகக் கொள்ளினும் பொருந்தும். உளங்கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவல் - கருத்தால் ஆராய்ந்து மிகத் தெளிந்து செய்யும் செய்யுட்களையுடைய; “உளங்கொண்டு தொண்டர், தீட்டுங் கலைத் தமிழ்” (706) என்பர் பின்னும். கவியாகிய மழை. கலாபம் - தோகை. மழை பெய்ய மயில் களித்தல் இயல்பு.
703. தூக்கும் - ஆராயும். பனுவல் துறை - தமிழ் நூல்களின் பாகுபாடுகள்; “தீந்தமிழின், துறைவாய் நுழைந்தனையோ” (திருச்சிற். 20). கல்வியென்றது நூல்களைக் கற்றுப்பெறும் செயற்கை அறிவு; வாக்கென்றது புண்ணிய வசத்தால் எளிதிற் கவியியற்றும் ஆற்றலாகிய இயற்கை அறிவு; “வாக்கிற்கருணகிரி” (தனிப்.).
|