பக்கம் எண் :

54குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

4. சப்பாணிப் பருவம்

ஆசிரிய விருத்தம்
34.
நாளவட் டத்தளிம நளினத் தொடுந்துத்தி    
   நாகணையும் விட்டொரெட்டு    
நாட்டத்த னும்பரம வீட்டத்த னுந்துஞ்சு    
   நள்ளிருளி னாப்பணண்ட    

கோளவட டம்பழைய நேமிவட் டத்தினொடு   
   குப்புற்று வெற்பெட்டுமேழ்   
குட்டத்தி னிற்கவிழமூடந்த வேதண்ட   
   கோதண்ட மோடுசக்ர   

வாளவட் டஞ்சுழல மட்டித்து நட்டமிடு
   மதமத்தர் சுத்தநித்த
வட்டத்தி னுக்கிசைய வொத்திக்க னத்ததன
   வட்டத்தை யொத்திட்டதோர்

    34. (அடி, 1) நாளவட்டத் தளிம நளினம் - தண்டையுடைய வட்டமாகிய மெத்தையைப் போன்ற தாமரை மலர்; இது பிரமதேவர் இருப்பிடம். துத்தி - படப்பொறி. நாகணை - நாக அணை; அணை - படுக்கை. எட்டு நாட்டத்தன் - எட்டுக் கண்களையுடைய பிரமதேவன். பரம வீடு அத்தன் - வைகுண்டத்தின் தலைவனாகிய திருமால்; வைகுண்டத்தைப் பரம்பதமென்றல் மரபு. நள்ளிருள் - செறிந்த இருள்; என்றது யுகாந்த காலத்து இருளை.

    (2-3) பழைய நே்மி வட்டம் - பழையதாகிய கடலாற் சூழப்பட்ட பூமி. குப்புற்று - கவிழ்ந்து. ஏழ்குட்டம் - ஏழுகடல்; கடலைக் குட்டமென்னும் வழக்கு, “கடற்குட்டம் போழ்வர் கலவர்” (நான்மணிக். 18) என்பதனாலும் உணரப்படும். மூதண்ட வேதண்ட கோதண்டம் - முதிய வானத்தை யளாவிய மேரு மலையாகிய வில். சக்ரவாள் வட்டம் - வட்டமான சக்கரவாள கிரி. மட்டித்து - அமிழ்த்தி. மதமத்தர் - ஊமத்த மலரையணிந்த சிவபெருமான்; மதமத்தம் - ஊமத்த மலர்; “கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம், உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமான்” (தே.) (பி-ம்.) ‘மதுமந்தர்’. சுத்த நித்தம்: ஒரு வகை நடனம்; இது சொக்க நிருத்த மென்றும் கூறப்படும்; சாந்திக் கூத்தின் வகையுள் ஒன்று. (சிலப். 3 : 12, அடியார்.) (பி-ம்.) ‘நிர்த்த வட்டம்’. ஒத்தி - கொட்டி. (பி-ம்.) ‘ஒற்றிக்.’