பக்கம் எண் :

540குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

49.
ஒன்றாகி யனைத்துயிர்க்கு முயிராகி யெப்பொருளும்
அன்றாகி அவையனைத்து மானாளைப் பாடுவனே.

50.
பரசிருக்குந் தமிழ்க்கூடற் பழியஞ்சிச் சொக்கருடன் 
அரசிருக்கு மங்கயற்கண் ணாரமுதைப் பாடுவனே. 

    கொச்கக் கலிப்பா
51.
நீர்வாழி தென்மதுரை நின்மலனா ரருள்வாழி
கார்வாழி யங்கயற்கட் கன்னிதிரு வருள்வாழி
சீர்வாழி கச்சிநகர்த் திருமலைபூ பதிவாழி
பேர்வாழி யவன்செல்வம் பெரிதூழி வாழியவே.

மதுரை மீனாட்சியம்மை குறம் முற்றிற்று.


    50. பரசு - புகழ்.

    51. கச்சிநகர்த் திருமலை பூபதி; இந்நூலாசிரியரை ஆதரித்த உபகாரி.