கட்டளைக் கலித்துறை 14. | நங்காய் திருத்தில்லை நன்னுத லாய்நுத னாட்டமொத்துன் | செங்காவி யங்கண் சிவப்பதென் னேசெழுங் கங்கையைநின் | பங்காளர் நின்னைப் பணியுமப் போதுகைப் பற்றிமற்றென் | தங்கா யெழுந்திரென் றாலவட் கேது தலையெடுப்பே. | | | |
நேரிசை வெண்பா 15. | தலைவளைத்து நாணியெந்தை தண்ணளிக்கே யொல்கும் | குலைவளைத்த கற்பகப்பூங் கொம்பர் - கலைமறைகள் | நான்குமரி யார்க்கிந்த ஞாலமெலா மீன்றளித்தும் | தான்குமரி யாகியிருந் தாள். | | | |
கட்டளைக் கலித்துறை 16. | தாளிற் பதித்த மதித்தழும் புக்குச் சரியெம்பிரான் | தோளிற் பதித்த வளைத்தழும் பேதொல்லைத் தில்லைப்பிரான் | வாளிற் பதித்த முலைத்தழும் பங்கவர் மார்பினிலந் | நாளிற் பதித்ததொன் றேயெம் பிராட்டி நடுவின்மையே. | | | |
14. நுதல் நாட்டம் - இறைவருடைய நெற்றிக்கண்ணை. கங்கை தலையிலிருக்கின்றாளே என்பது பற்றி நீ சினப்பதனாற் பயன் என்? பணியும் போது உடன் விழும் கங்கையின் கையைப் பற்றி எழுந்திரு என்றால். இறைவன் உனக்கு அஞ்சித் தலையில் கங்கையை ஒளித்து வைத்திருக்கின்றார்; நீ அவளைத் தங்கையென்பாயாயின், அவள் உன்னோடு இருப்பாளென்றபடி. தலை எடுப்பு - தலையில் எடுத்தல், இறுமாப்பு; சிலேடை.
நின் தங்கையென்று கூறின் இறுமாப்பு இராது என்றபடி.
15. இறைவன் தண்ணளிக்குத் தலைவளைத்து நாணி ஒல்கும் கொம்பர்: சிவகாமவல்லி. மறைகள் நான்கும் மரியார்க்கு வேதங்கள் நான்கிலும் மருவியவருக்கு. தான்: அசைநிலை. குமரி - இளங்கன்னி.
16. வளைக்குப் பிறை உவமை: (குமர. 527). வரளின் ஒளியோடு. நடுஇன்மை - நடுவு நிலையில்லாமை. இறைவர் மதித்தழும்பைச் செய்தற்கு வளைத்தழும்பைச் செய்தாய். அவர் ஒன்றும் நின் மார்பிற் செய்யாதிருப்பக் கொங்கைத் தழும்பை மிகையாகச் செய்தாய். இது நடுநிலையின்மை யாகும்.
|