பக்கம் எண் :

56குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

மெய்வந்த நாணினொடு நுதல்வந் தெழுங்குறு
   வெயர்ப்பினொ டுயிர்ப்புவீங்கும்
விம்மிதமு மாய்நின்ற வுயிரோவ மெனவூன்று
   விற்கடை விரற்கடைதழீஇத்

தைவந்த நாணினொடு தவழ்தந்த செங்கைகொடு
   சப்பாணி கொட்டியருளே
தமிழொடு பிறந்துபழ மதுரையில் வளர்ந்தகொடி
   சப்பாணி கொட்டியருளே.    
(2)

36.
பூமரு வெடிப்பமுகை விண்டதண் டலையீன்ற
   புனைநறுந் தளிர்கள் கொய்தும்
பொய்தறை பிணாக்களொடு வண்டற் கலம்பெய்து
   புழுதிவிளை யாட்டயர்ந்தும்

காமரு மயிற்குஞ்சு மடவுப் பார்ப்பினொடு
   புறவுபிற வும்வளர்த்தும்
காந்தள்செங் கமலத்த கழுநீர் மணந்தெனக்
   கண்பொத்தி விளையாடியும்

தேமரு பசுங்கிள்ளை வைத்துமுத் தாடியும்
   திரள்பொற் கழங்காடியும்
செயற்கையா னன்றியு மியற்கைச் சிவப்பூறு
   சேயிதழ் விரிந்த தெய்வத்

    (3) உயிர்ப்பு - மூச்சு. உயிர் ஓவம் - உயிரோடமைந்த சித்திரம்; “உடுக்கும் புவனங் கடந்துநின்ற வொருவன் றிருவுள்ளத்திலழ - கொழுக வெழுதிப் பார்த்திருக்கு முயிரோ வியமே” (62.) விற்கடை - வில்லின் கால்களை. விரற்கடையால் தழுவி.

    36. அம்பிகையின் இளமைப் பருவத்து விளையாட்டுக்கள் கூறப்படும்.

    (அடி, 1) மரு வெடிப்பப் பூ முகை விண்ட - நறுமணம் வெளிப்படும்படி பூவானது அரும்பவிழ்ந்த. தண்டலை - சோலை. தளிர் கொய்தல் - மகளிர் விளையாட்டு. பொய்தற் பிணாக்கள் - விளையாட்டு மகளிர்; பொய்தல் விளையாத்து - வண்டல் கலம்பெய்து - விளையாட்டுக்குரிய செப்புக்களை வைத்து; இது சிறு சோறடுதலைக் குறித்தது. புழுதி விளையாட்டு - புழுதியிலே விளையாடுதல்.

    (2) மடவனப் பார்ப்பு - இளைய அன்னப்பறவையின் குஞ்சு. புறவு - புறா. பிறவும் - மற்றப் பறவைகளும்; அவை நாகண - வாய்ப்புள் முதலியன. கைக்குக் காந்தளும் முகத்துக்குக் கமலமும் கண்ணுக்குக் கழுநீரும் உவமை; கழுநீர் - இங்கே கருங்குவளை. (பி-ம்.) ‘முகந்தெனக்.’

    (3) முத்தாடி - முத்தமிட்டு. பொற்கழங்கு - பொன்னாலாகிய கழற்சிக்காய்; “முத்த வார்மணற் பொற்கழங் காடும்” (பெரும்பாண். 335)