| தாமரை பழுத்தகைத் தளிரொளி துளும்பவொரு | | சப்பாணி கொட்டியருளே | | தமிழொடு பிறந்துபழ மதுரையில் வளர்ந்தகொடி | | | 37. | விண்ணளிக் குஞ்சுடர் விமானமும் பரநாத | | வெளியிற் றுவாதசாந்த | | வீடுங் கடம்புபொதி காடுந் தடம்பணை | | விரிந்ததமிழ் நாடுநெற்றிக் |
| கண்ணளிக் குஞ்சுந்த ரக்கடவுள் பொலியுமறு | | காற்பீட மும்மெம்பிரான் | | காமர்பரி யங்கக் கவான்றங்கு பள்ளியங் | | கட்டிலுந் தொட்டிலாகப் |
| பண்ணளிக் குங்குதலை யமுதொழுகு குமுதப் | | பசுந்தேற லூறவாடும் | | பைங்குழவி பெருவிரல் சுவைத்துநீ பருகிடப் | | பைந்தேற லூறுவண்கைத் |
(4) இயல்பாகவே செந்நிறம் பொருந்திய கைகள் தளிர் கொய்தல் முதலியவற்றாற் பின்னும் சிவப்பேறின. தாமரை பழுத்த கை - தாமனையப் போன்ற இயல்பு முதிர்ந்த கை; பழுத்த: உவம உருபுமாம்.
37. இச் செய்யுளின் முற்பகுதியில் அம்பிகை இருக்கும் இடங்கள் கூறப்படும்.
(அடி, 1) விமானம் - இந்திர விமானம். துவாத சாந்தம் - பிரமரந்திரத்திற்கு மேலே பன்னிரண்டுதானங்களுக்கு அப்பாலுள்ளது; “துவாத சாந்தப் பெருவெளியிற் றுரியங் கடந்த பரநாத, மூலத் தலத்து முளைத்தமுழு முதலே” (44) என்பர் பின்; திருவிளை. 6 : 7, 64-54 - ஆம் செய்யுட்களைப் பார்க்க.
(2) அறு காற் பீடம்: இது திருக்கோயிலிலுள்ளது. பரியங்கம் - துயிலுமிடம்.கவான் - துடை; துவாத சாந்தத்திலுள்ள சதாசிவமூர்த்தியின இடத்துடையில் அம்பிகைவீற்றிருப்பதாகத் தேவியைப் பற்றிய நூல்கள் கூறுமென்பர். (பி-ம்.) ‘கவின்றங்கு.’
(3) குமுத்தென்றது வாயை. குமுதப் பசுந்தேறல் - வாய் நீர் (14, 401) பைங்குழவியாகிய நீ. குழந்தைகள் தம் பெருவிரலைச் சுவைத்தல் இயல்பு. (பி-ம்.) ‘சுவைத்துநீர் பருகிட.’
|