பக்கம் எண் :

58குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

தண்ணளிக் கமலஞ் சிவப்பூற வம்மையொரு 
   சப்பாணி கொட்டியருளே 
தமிழொடு பிறந்துபழ மதுரையில் வளர்ந்தகொடி 
   சப்பாணி கொட்டியருளே.    
(4)

38.
சேலாட்டு வாட்கட் கருங்கடற் கடைமடை
   திறந்தமுத மூற்றுகருணைத்
தெண்டிரை கொழித்தெறிய வெண்டிரை நெருப்பூட்டு
   தெய்வக் குழந்தையைச் செங்

கோலாட்டு நின்சிறு கணைக்காற் கிடத்திக்    
   குளிப்பாட்டி யுச்சிமுச்சிக்    
குஞ்சிக்கு நெய்போற்றி வெண்காப்பு மிட்டுவளர்    
   கொங்கையிற் சங்குவாக்கும்

பாலாட்டி வாயிதழ் நெரித்தூட்டி யுடலிற்
   பசுஞ்சுண்ண முந்திமிர்ந்து
பைம்பொற் குறங்கினிற் கண்வளர்த் திச்சிறிய
   பருமணித் தொட்டிலேற்றித்

    (3-4) குழவி நீ பருகிடத் தேறல் ஊறு கைக்கமலம்.

    (முடிபு.) விமானமும் வீடும் காடும் நாடும் பீடமும் கட்டிலும் தொட்டிலாக ஆடும் குழவிநீ கொட்டியருள்.

    38. இதில், உக்கிரகுமார பாண்டியரை அம்பிகை வளர்த்த முறை கூறப்படும்.

    (அடி, 1) வெண்டிரை - கடல். தெய்வக் குழந்தை - உக்கிர குமார பாண்டியர். அவர் கடல் சுவற வேலெறிந்த வரலாற்றை நினைந்து இங்ஙனம் கூறினார்.

    (2) கோல் - திரட்சி. கோல் - அம்பு; இங்கே ஆகு பெயராய் அம்பறாத்தூணியைக் குறிப்பதெனக் கொள்ளலுமாம். உச்சி - உச்சந்தலை. முச்சி- உச்சிக்கொண்டை. குஞ்சி - ஆண் தலைமயிர். (பி-ம்.) ‘முச்சியுச்சி’; ‘நெய் பொத்தி’. வெண் காப்பு - திருநீறு.

    (2-3) கொங்கையிற் பால், சங்கு வாக்கும் பால். ஆட்டி - அசைத்து. குழந்தைக்குப் பாலூட்டுவார் அதனை அசைத்துக் கலக்கி யூட்டுதல் வழக்கம். வாயிதழ் நெரித்தூட்டல்: “நெய்பாலடைக்கலந் தாய்வைத்து வாய்நெரித் தூட்ட வழுமையனே” (திருவரங்கத்தந். 18.) திமிர்ந்து - பூசி. (பி -ம்.) ‘பரூஉமணித்’.