| கூனற் சிலையி னெடுங்கணை தொட்டவள் | | கொட்டுக சப்பாணி | | குடைநிழ லிற்புவி மகளை வளர்த்தவள் | | |
40. | சமரிற் பிறகிடு முதியரு மபயரும் | | எதிரிட் டமராடத் | | தண்ட தரன்செல் கரும்பக டிந்திரன் | | வெண்பக டோடுடையாத் |
| திமிரக் கடல்புக வருணன் விடுஞ்சுற | | வருணன் விடுங்கடவுட் | | டேரி னுகண்டெழ வார்வில் வழங்கு | | கொடுங்கோல் செங்கோலா |
| இமயத் தொடும்வளர் குலவெற் பெட்டையும் | | எல்லைக் கல்லினிறீஇ | | எண்டிசை யுந்தனி கொண்டு புரந்து | | வடாது கடற்றுறைதென் |
| குமரித் துறையென வாடு மடப்பிடி | | கொட்டுக சப்பாணி | | குடைநிழ லிற்புவி மகளை வளர்த்தவள் | | |
40. அம்பிகை போர் புரிகையில் பகைப்படைகள் தம்முள்ளே முரணிப்பொருத செய்தி கூறப்படும்.
(அடி, 1) பிறகிடும் - முதுகிட்டோடும். உதியர் - சேரர். அபயர் - சோழர். தண்டதரன் - யமன். அவன் செல் கரும்பகடு - எருமைக் கடா. வெண்பகடு - வெள்ளை யானை; ஐராவதம். உடையா - தோற்று.
(2) திமிரக் கடல் - இருளாகிய கடலில். சுறவு - சுறாமீன்; இது வருணன். வாகனம். அருணன் - சூரியன் தேர்ப்பாகன். சுறவு உகண்டெழ. கோல் - அம்பு. கொடுமை அம்புக்கு அடை; “கணைகொடிது” ( குறள், 279.)
(3) குலாசலங்கள் எட்டையும் தன் ஆட்சிக்குரிய நிலத்திற்கு எல்லைக் கல்லாக நிறுத்தி; ஆட்சிநிலத்தின் எல்லையில் கல் நடுவது மரபு. தனிகொண்டு - பொதுவாக இருந்த நாடுகளைத் தனக்கே உரியனவாக்க் கொண்டு.
(4) பிடி: விளி
|