41. | சென்றிடு வாளிகள் கூளிகள் காளிகள் | | ஞாளியி லாளியெனச் | | செருமலை செம்மலை முதலியர் சிந்தச் | | சிந்திட நந்திபிரான் |
| நின்றில னோடலு முன்னழ கும்மவன் | | பின்னழ குங்காணா | | நிலவுவி ரிந்திடு குறுநகை கொண்டு | | நெடுங்கயி லைக்கிரியின் |
| முன்றிலி னாடன் மறந்தம ராடியொர் | | மூரிச் சிலைகுனியா | | முரிபுரு வச்சிலை கடைகுனி யச்சில | | முளரிக் கணைதொட்டுக் |
| குன்றவி லாளியை வென்ற தடாதகை | | கொட்டுக சப்பாணி | | குடைநிழ லிற்புவி மகளை வளர்த்தவள் | | |
41. இதில் தேவி கைலையங்கிரியை அடைந்து இறைவனை வயப்படுத்திய செய்தி கூறப்படும்.
(அடி, 1-2) வாளிகள் - தேவி செலுத்திய அம்புகள். கூளிகள், காளிகள், வைகவக்கடவுள் முதலியோர் சிவபெருமானுக்குரிய படையைச் சார்ந்தோர். கூளி - பெண்பேய். ஞாளி - நாய்; இது வைரவரது வாகனம். ஆளி - சிங்கம்; இஃது அவருக்கு உவமை. ஞாளியில் ஆளியெனச் செருமலை செம்மல் - வைரவக் கடவுள். செம்மலை: ஐ, சாரியை. செம்மல் முதலியர் சிந்தும்படி தேவியின் வாளிகள் சிந்திட. தேவியால் எய்யப்பட்டனவாயினும் வாளியின் செயலாக்க் கூறினார், அச்செயல் தேவிக்கேற்ற பெருமையை உடையதன்றென நினைந்து, (பி-ம்.)‘நின்றவரோடலும்’.
(3) ஆடல் - முன்பு தான் இறைவனுடன் கைலையில் விளையாடிக் கொண்டிருந்தமையை. முரி புருவச்சிலை - வளைந்த புருவமாகிய வில்லை. சில - இரண்டு. முளரிக்கணை - தாமரை மலராகிய அம்பு; என்றது கண்களை; அக்கினிக்கணை யென்னும் பொருளும் தோற்றுகின்றது; முளரி - நெருப்பு.
(4) குன்றவிலாளி - மேருமலையாகிய வில்லை ஆள்பவர். தடாதகை: விளி.
(முடிபு.) வாளிகள் சிந்தட ஓடலும், காணா நகைகொண்டு சிலைகுனியாத் தொட்டு வில்லாளியை வென்ற தடாதகை.
|