சந்த விருத்தம் 42. | ஒழுகிய கருணையு வட்டெழ வைத்தவ ருட்பார்வைக் | | குளநெகி ழடியர்ப வக்கடல் வற்றவ லைத்தோடிக் | | குழையொடு பொருதுகொ லைக்கணை யைப்பிணை யைச்சீறிக் | | குமிழொடு பழகிம தர்த்தக யற்கண்ம டப்பாவாய் |
| தழைகெழு பொழிலின்மு சுக்கலை மைப்புய லிற்காயத் | | தவழிள மதிகலை நெக்குகு புத்தமு த்ததோடே | | மழைபொழி யிமயம யிற்பெடை கொட்டுக சப்பாணி | | மதுரையில் வளரும் டப்பிடி கொட்டுக சப்பாணி. |
43. | செழுமறை தெளியவ டித்தத மிழ்ப்பதி கத்தோடே | | திருவரு ளமுதுகு ழைத்துவி டுத்தமு லைப்பாலாற | | கழுமல மதலைவ யிற்றைநி ரப்பிம யிற்சேயைக் | | களிறொடும் வளரவ ளர்த்தவ ருட்செவி லித்தாயே |
| குழலிசை பழகிமு ழுப்பிர சத்திர சத்தோடே | | குதிகொளு நறியக னிச்சுவை நெக்கபெ ருக்கேபோல் | | மழலையி னமுதுகு சொற்கிளி கொட்டுக சப்பாணி | | மதுரையில் வளரும டப்பிடி கொட்டுக சப்பாணி. |
42. (சந்தக்குழிப்பு.) தனதன தனதன தத்தன தத்தன தத்தான.
(அடி,1-2) அம்பிகையின் திருவிழிகளது பெருமை கூறப்படும்.
(1) உவட்டெழ - பெருக்கெழும்படு, பவக்கடல் - பிறவியாகிய கடல்.
(2) குழை - காலணி. பிணை - பெண்மான். குமிழென்றது மூக்கை. பாவாய் - பானவயே. ஓடிப் (1) பொருது சீறிப்பழகி மதர்த்த கண்.
(3-4) முசுக்கலை - ஆண் குரங்கு. முசுக்கலை மேகத்திற் பாய, அம்மேகத்தின்மேல் தவழ்கின்ற சந்திரன் கிழிதலால் ஒழுகுகின்ற அமுதத்தோடு மேகம் நீரைப் பொழியும் இமயமென்க. மைப்புயல் - நீருண்டு கறுத்த மேகம்.
43. (அடி, 1) மறையினின்றும் வடித்த; மறை - உபநிடதம் அறிதற்கருய உபநிடதப் பொருளைத் தேவாரத் திருப்பதிகம் எளிதில் அறியும்படி செய்கின்ற அருமை குறிப்பக்கடுகின்றது.
(2) கழுமலம் - சீகாழி. கழுமலை மதலை - திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். பாலால் (1) நிரப்பி. மயிற் சேய் - முருகப்பிரான். களிறு - விநாயகர். (பி-ம்.) ‘மயிற்சேய்கைக் களிறொடும்.’
(3) பிரசத்து இரசம் - தேனின் இனிமை. நெக்க -நெகிழ்ந்த. குழலின் இசையும் தேனின் இனிமையும் கனியின் சுவையும் அமுதும் மழலைச் சொல்லுக்கு உவமைகள்.
|