5. முத்தப் பருவம்
ஆசிரிய விருத்தம் 44. | காலத் தொடுகற் பனைகடந்த | | கருவூ லத்துப் பழம்பாடற் | | கலைமாச் செல்வர் தேடிவைத்த | | கடவுண் மணியே யுயிரால |
| வாலத் துணர்வு நீர்பாய்ச்சி | | வளர்ப்பார்க் கொளிபூத் தளிபழுத்த | | மலர்க்கற் பகமே யெழுதாச்சொல் | | மழலை ததும்பு பசுங்குதலைச் |
| சோலைக் கிளியே யுயிர்த்துணையாம் | | தோன்றாத் துணைக்கோர் துணையாகித் | | துவாத சாந்தப் பெருவெளியிற் | | றுரியங் கடந்த பரநாத |
| மூலத் தலத்து முளைத்தமுழு | | முதலே மத்தந் தருகவே | | முக்கட் சுடர்க்கு விருந்திடுமும் | | | 44. (அடி, 1) கற்பனை - கற்பித்தல். கருவூலம் - பொக்கிஷம். (பி-ம்.) ‘கருகூலத்துப்’. பழம்பாடல் - வேதம். செல்வர் - ஞானியர். தேடி வைத்த - அறிந்து வைத்த, கருவூலத்தில் வைத்த மணி.
(1-2) ஆலவாலம் - பாத்தி. உணர்வு - மெய்ஞ்ஞானம். (பி-ம்.) ‘உணர்வன்னீர்’; ‘அருள்பழுத்த’. தேவியைக் கற்பகமென்று உருவகித்தற்கேற்ப்ப் பாத்தியும் நீர்பாய்ச்சலும் பூத்தலும் பழுத்தலும் கூறப்பட்டன. குதலை - எழுத்து வடிவம் பெறாத சொல்.
(3) தோன்றாத்துணை - இறைவன்; “தோன்றாத் துணையாயிருந்தனன் றன்னடி யோங்களுக்கே” (தே.)
(4) முக்கட்சுடர் - சிவபெருமானுடைய கண்களாகிய மூன்று சுடர்கள்; சோம சூரியாக்கினிகள் (63.)
|