45. | உருகி யுருகி நெக்குநெக்குள் | | உடைந்து கசிந்திட் டசும்பூறும் | | உழுவ ளன்பிற் பழவடியார் | | உள்ளத் தடத்தி லூற்றெடுத்துப் |
| பெருகு பரமா னந்தவெள்ளப் | | பெருக்கே சிறியேம் பெற்றபெரும் | | பேறே யூறு நறைக்கூந்தற் | | பிடியே கொடுநுண் ணுசுப்பொசிய |
| வருகுங் குனக்குன் றிரண்டேந்தும் | | மலர்ப்பூங் கொம்பே தீங்குழலின் | | மதுரங் கனிந்த பசுங்குதலை | | மழலை யரும்பச் சேதாம்பல் |
| முருகு விரியுஞ் செங்கனிவாய் | | முத்தந் தருக முத்தமே | | முக்கட் சுடர்க்கு விருந்திடுமும் | | |
46. | கொழுதி மதர்வண் டுழக்குகுழற் | | கோதைக் குடைந்த கொண்டலுநின் | | குதலைக் கிளிமென் மொழிக்குடைந்த | | குறுங்கட் கரும்புங் கூன்பிறைக்கோ |
45. (அடி, 1) நெக்கு நெக்கு - நெகிழ்ந்து நெகிழ்ந்து. உள் உடைந்து - உள்ளம் உருகி. அசும்பு - துளி. உழுவல் அன்பு - ஏழு பிறப்பும் தொடர்ந்த அன்பு; உழுவலன்பென்பதன் பொருளைப் பழவடியா ரென்பதனாலும் வற்புறுத்தினார். தனம் - தடாகம்.
(2) (பி - ம்.) ‘பெருகும்’. ஊறும் நறை - ஊறுகின்ற தேன்; நறை - ஊறுகின்ற தேன்; நறை - நறுமணமுமாம். (பி-ம்.) ‘நாறுநறை’. பிடியின் தலைமயிரைக் கூந்தலென்பர். நூசுப்பு - இடை.
(3) குங்குமக்குன்று இரண்டென்றது நகில்களை (59.) சேதாம்பல் - செவ்வாம்பலினது.
(4) முருகு - நறுமணம்.
46. மேகம் முதலியவை அம்பிகையின் கூந்தல் முதலியவற்றிற்குத் தோற்றனவாதலின் அவற்றில் உண்டாகும் முத்துக்கள் அம்பிகையின் திருவாய் முத்தை (முத்தத்தை) ஒவ்வாவென்பது கூறப்படும்.
(அடி, 1) கொழுதி - கிண்டி. குழற்கோதை - சுருளுதலையுடைய கூந்தல். உடைந்த - தோற்ற. கொண்டல் - மேகம். குறுங்கண் - குறிய கணுக்கள்.
|