பக்கம் எண் :

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்65

டுழுத பொலன்சீ றடிக்குடைந்த
   செந்தா மரையும் பசுங்கழுத்துக்
குடைந்த கமஞ்சூற் சங்குமொழு
   கொளிய கமுகு மழகுதொய்யில்

எழுது தடந்தோட் குடைந்ததடம்
   பணையும் பணைமென் முலைக்குடைந்த
இணைமா மருப்புந் தருமுதுன்
   திருமுத் தொவ்வா வீகபரங்கள்

முழுதுந் தருவாய் நின்கனிவாய்
   முத்தந் தருக முத்தமே
முக்கட் சுடர்க்கு விருந்திடுமும்
   முலையாய் முத்தந் தருகவே.    
(3)

47.
மத்த மதமாக் கவுட்டொருநான்
   மருப்புப் பொருப்பு மிசைப்பொலிந்த
வானத் தரசு கோயில்வளர்
   சிந்தா மணியும் வடபுலத்தார்

நத்தம் வளர வளகையர்கோன்
   நகரில் வளரும் வான்மணியும்
நளினப் பொகுட்டில் வீற்றிருக்கும்
   நங்கை மனைக்கோர் விளக்கமெனப்

    (1-2) பிறைக்கோடுழுத பொலன்சீறடி யென்றது சிவபெருமான் தேவியினது ஊதலை நீக்கும் பொருட்டு வணங்கியதை நினையது கூறியது; “முழுமணி மிடற்றன் கனன்மழு வீரன் முக்கணான் டகைநினதெழில்கூர், முகம்புலர் தலைக்கண் டுடல்வளைந்தடியின் முனைப்பிறைக் கோடுகொண் டுழுது” (பெரியநாயகி. ஆசிரிய. 1.) சங்கும் கமுகுமாகிய இரண்டும் கழுத்துக்கு உடைந்தன.

    (3)(பி-ம்.) ‘தொடித்தோள்’. பணை - மூங்கில். திருமுத்து - வாய் முத்தம்; முத்தம் முத்தென நின்றது, ‘முத்தாடி’ என்புழிப்போல.

    47. (அடி, 1) மத்தம் - களிப்பு. (திருச்சிற். 388, பேர்.) கவுட்டு - கவுளை யுடையதாகிய. நான் மருப்புப் பொருப்பு - ஐராவதம். வானத்தரசு கோயில் - இந்திரனது அரண்மனையில். வடபுலத்தார் - இயக்கர்கள்.

    (2) ந்ததம் - ஊர். அளகையர்கோன் - குபேரன்; இவன் வடதிசைக்கு அதிபன்.