பக்கம் எண் :

66குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

பைத்த சுடிகைப் படப்பாயற்
   பதும நாபன் மார்பில்வளர்
பருதி மணியு மெமக்கம்மை
   பணியல் வாழி வேயீன்ற

முத்த முகந்த நின்கனிவாய்
   முத்தந் தருக முத்தமே
முக்கட் சுடர்க்கு விருந்திடுமும்
   முலையாய் முத்தந் தருகவே.        
(4)

48.
கோடுங் குவடும் பெருதரங்கக்
   குமரித் துறையிற் படுமுத்தும்
கொற்கைத் துறையிற் றுறைவாணர்
   குளிக்குஞ் சலாபக் குவான்முத்தும்

ஆடும் பெருந்தண் டுறைப்பொருநை
   ஆற்றிற் படுதெண் ணிலாமுத்தும்
அந்தண் பொதியத் தடஞ்சாரல்
   அருவி சொரியுங் குளிர்முத்தும்

வாடுங் கொடிநுண் ணுசுப்பொசிய
   மடவ மகளி ருடனாடும்
வண்டற் றுறைக்கு வைத்துநெய்த்து
   மணந்தாழ் நறுமென் புகைப்படலம்

    (3) பைத்த - விரித்த. பருதிமணி - சூரியன் போன்ற மணி; கௌத்துவமணி. அம்மை - தாயாகிய நீ. பணியல் - தந்தருளாதே.

    (3-4.) வேயீன்ற முத்தம் - சிவபெருமான்.

    48. (டி, 1) கோடு - கரை. குவடு - மலை. கொற்கை - பாண்டி நாட்டுக் கடற்றுறைப்பட்டினம். துறைவாணர் - நெய்தல் நிலத்தார். சலாபம் - முத்துக் குளித்தல். குவால் - குவியல். கொற்கை முத்து; “விளைந்து முதிர்ந்த விழுமுத்தின் .........நற்கொற்கையோர் நசைப்பொருந” (மதுரைக். 135-8): “மல்குநீர் வரைப்பிற் கொற்கை முன்றுறை, ஊதையீட்டிய வுயர்மண லடைகரை, ஓத வெண்டிரை யுதைத்த முத்தம்” (தொல். களவு. 11, ந. மேற்.)

    (2) பொருநையாறு - தாமிரபன்னிநதி; “பொதியில், நதியிலே விளைகின்றன முத்தம்” (திருவிளை.)

    (3) வண்டற்றுறை - விளையாட்டிடங்கள். நெய்த்து - பளபளபையுடையதாகி. நறுமென் புகைப்படலம் - அகிற்புகை முதலியவற்றின் பரப்பு.