| மூடுங் கூழலாய் நின்கனிவாய் | | முத்தந் தருக முத்தமே | | முக்கட் சுடர்க்கு விருந்திடுமும் | | |
வேறு 49. | பைவைத்த துத்திப் பரூஉச்சுடிகை முன்றிற் | | பசுங்கொடி யுடுக்கைகிழியப் | | பாயிருட் படலங் கிழித்தெழு சுடர்பருதி | | பருதிக் கொடுஞ்சி மான்றேர் | | மொய்வைத்த கொய்யுளை வயப்புரவி வாய்ச்செல்ல | | முட்கோல் பிடித்துநெடுவான் | | முற்றத்தை யிருள்பட விழுங்குந் துகிற்கொடி | | முனைக்கணை வடிம்புநக்கா |
| மைவைத்த செஞ்சிலையு மம்புலியு மோடநெடு | | வான்மீன் மணந்துகந்த | | வடவரை முகந்தநின் வயக்கொடி யெனப்பொலியும் | | மஞ்சிவர் வளாகநொச்சித் | 49. மதுரையிலுள்ள மதிற்கொடிகளின் சிறப்பு இதிற் சொல்லப்படும்.
(அடி, 1) பை - படம். துத்தி - படப் பொறி. சுடிகை முன்றில் - ஆதிசேடனது உச்சிப்பரப்பு. அதிலுள்ள கொடி போல்வாள் பூமிதேவி. அவளது உடுக்கை கடல். சுடர்ப்பருதி - சூரியனது. கிழிய எழு பருதியென்க. பருதியையும் கொடுஞ்சியையும் உடைய தேர்; பருதி - தேருருளை; மான்றேரென்பது தேரென்னும் மாத்திரையாய் நின்றது. (பி-ம்.) ‘பரிதி பரிதிக் கொடுஞ்சி மான்றேர்’.
(2) சூரியனது தேரிற்கட்டிய புரவி வாவிச்செல்லும்படி. முட்கோல் - குதிரையை ஓட்டுதற்குரிய தாற்றுக்கோல்; என்றது இங்கே கொடியின் உச்சியிலுள்ள கூரிய உறுப்பை; அதுவே முட்கோலைப்போல உதவியது. செல்லப் பிடித்து என்க. துகிற் கொடி: எழுவாய். (பி-ம்.) ‘நிழற்றுந் துகிற்கொடி.’
(2-3) துகிற்கொடிக்கும் அம்பிகையின் கயற்கொடிக்கும் சிலேடை. முனைக்கணை - முனையையுடைய அம்பினது. வடிம்பு - விளிம்பு. நக்காச் சிலை - பொருந்தாத சிலை; வெளிப்படை. சிலை - இந்திரவில், சேரரது விற்கொடி. அம்புலி - சந்திரன், சோழர்க்குரிய அழகிய புலிக்கொடி. மீன் - மீனராசி, கொடியிலெழுதிய மீன். உகந்த வடவரை
|