| தெய்வத் தமிழ்க்கூட றழையத் தழைத்தவள் | | திருப்பவள முத்தமருளே | | சேல்வைத்த வொண்கொடியை வலம்வைத்த பெண்கொடி | | | 50. | பின்னற் றைரைக்கடன் மதுக்குட மறத்தேக்கு | | பெய்முகிற் காருடலவெண் | | பிறைமதிக் கூன்குயக் கைக்கடைஞ ரொடுபுடை | | பெயர்ந்திடை நுடங்கவொல்கும் |
| மின்னற் றடித்துக் கரும்பொற் றொடிக்கடைசி | | மெல்லியர் வெரீஇப்பெயரவான் | | மீன்கணம் வெருக்கொள்ள வெடிவரால் குதிகொள்ளும் | | விட்புலம் விளைபுலமெனக் |
உயர்ந்த மேருமலை; “உகப்பே யுயர்வு” (தொல், உரி.8) வளாகம் - பரப்பு. நொச்சி - மதில்.
(4) திருப்பவளம் - வாய்.
(முடிபு.) துகிற்கொடி சிலையும் அம்புலியும் ஓட மீனைமணந்து நின் கொடியெனப் பொலிதற்கு இடமாகிய நொச்சியையுடைய கூடல்.
50. வானளவும் உயர்ந்து வளர்ந்த கரும்பும் நெல்லும் அவ்வானத்தை விளைபுலம் போளத் தோற்றும்படி செய்வதாக்க் கற்பித்து அதற்கேற்ப மேகத்தை மள்ளர்களாகவும் மின்னலைக் கடைசியராகவும் விண்மீன்களை மீன்களாவும் உருவகம் செய்கின்றார்.
(அடி, 1) கடலாகிய மதுக்குடம். அற - முழுவதும். தேக்கு - நிறைய உண்ட. காருடலையும் மதியாகிய குயக்கையையும் உடைய கடைஞர். முகிலாகிய கடைஞர். கடைஞர் - மள்ளர். கூன்குயம் - வளைவையுடைய அரிவாள். (பி-ம்.) ‘காருடலம் வெண்’. ‘கடையரொடு.’
(2) மின்னற் றடித்து - மின்னுதலையுடைய மின்னல். கரும்பொற்றொடி - இரும்பாலாகிய கைவளையையுடைய; கரும்பொன் - இரும்பு. தடித்தாகிய கடைசி மெல்லியர். வான்மீன்கணம் - நட்சத்திரக்கூட்டம், வெள்ளிய மீன்களின் தொகுதி. வெடிவரால் - துள்ளும் வரால்மீன். விளைபுலம் - வயல். என - என்று யாரும் சொல்லும்படி.
(1-2) கடைஞரொடு மெல்லியர் பெயரவும் மீன்கணம் வெருக்கொள்ளவும் வரால் குதிகொள்ளும்.
|