பக்கம் எண் :

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்69

கன்னற் பெருங்காடு கற்பகக் காட்டுவளர்
   கடவுண்மா கவளங்கொளக்
காமதே னுவுநின்று கடைவாய் குதட்டக்
   கதிர்க்குலை முதிர்ந்துவிளையும்

செந்நெற் படப்பைமது ரைப்பதி புரப்பவள்
   திருப்பவள் முத்தமருளே
சேல்வைத்த வொண்கொடியை வலம்வைத்த பெண்கொடி
   திருப்பவள முத்தமருளே.    
(7)

51.
சங்கோ லிடுங்கடற் றானைக்கு வெந்நிடு
   தராபதிகண் முன்றி றூர்த்த
தமனியக் குப்பையுந் திசைமுதல்வர் தடமுடித்
   தாம்முந் தலைமயங்கக்

கொங்கோ லிடுங்கைக் கொடுங்கோ லொடுந்திரி
   குறும்பன் கொடிச்சுறவுநின்
கொற்றப் பதாகைக் குழாத்தினொடு மிரசதக்
   குன்றினுஞ் சென்றுலாவப்

    (3) கன்னல் - கரும்பு. கடவுண்மா - ஐராவதம். கன்னற்காட்டைக் கடவுண்மா கவளம் கொள. கடைவாய் குதட்ட - தின்று அசை போடும்படி.

    (4) படப்பை - இங்கே வயல். “பாசவற்படப்பை” (புறநா. 6:14.)

    இதனால் மதுரையின் நிலவளம் சிறப்பிக்கப்பட்டது. “நிலத்துக் கணி யென்ப நெல்லுங் கரும்பும்” (நான்மணிக்.) என்பராதலின் அவ்விரண்டாலும் அச்சிறப்பை இங்கே புலப்படுத்தினர்.

    51. தடாதகைப்பிராட்டியின் செங்கோற் சிறப்புக் கூறப்படும்.

    (அடி, 1) கடல்போன்ற தானை. சங்கு ஓலிடுதல் கடலுக்கும் தானைக்கும் பொது. வெந்நிடு தராபதிகள் - புறங்காட்டிய அரசர்கள். முன்றில் - தடாதகைப் பிராட்டியாரின் அரண்மனை முற்றம். தமனியக் குப்பை - பொற்குவியல்; இதுபிற அரசர்கள் இட்ட திறை. திசை முதல்வர் - திக்குப்பாலகர். முடித்தாமம் - முடியிலணிந்த கற்பக மலர் மாலை; அது பொன்னிறத்தது. தலைமயங்க - ஒன்றனோடு ஒன்று கலந்து கிடப்ப.

    (2) கொங்கு - நறுமணம். கொடுங்கோலென்றது மலரம்புகளை. குறும்பன் - மன்மதன். கொற்றப்பதாகை - வெற்றிக் கொடி. இரசதக்குன்று - கைலாயம். அம்பிகை சென்றதனால் சிவபெருமான் திருவுள்ளத்தே விருப்பம் விளைவிக்க ஏதுவுண்டாமாதலாலும், அம்பிகையின் கொடிக்கும் தன் கொடிக்கும் வேறுபாடு இன்னமையாலும், முன்பு