| பொங்கோல வேலைப் புறத்தினொ டகத்தினிமிர் | | போராழி பருதியிரதப் | | பொங்காழி மற்றப் பொருப்பாழி யிற்றிர | | புலம்பைப் புலம்புசெய்யச் |
| செங்கோ றிருத்திய முடிச்செழியர் கோமகள் | | திருப்பவள முத்தமருளே | | சேல்வைத்த வொண்கொடியை வலம்வைத்த பெண்கொடி | | |
சந்த விருத்தம் 52. | பருவரை முதுபல வடியினி னெடுநில | | நெக்ககு டக்கனியிற் | | படுநறை படுநிறை படமுடை படுவக | | டுப்பவு வட்டெழவும் |
அழிவுற்ற காமன் அம்பிகையின் கொடியைத் துணையாகப் பெற்றுத் தன் கொடியோடு கைலைக்குச் சென்றானென்பது கருத்து.
(3) சூரியனது தேர் உலவுகின்ற எல்லையாகிய சக்கரவாள கிரியளவும் தடாதகைப் பிராட்டியாரின் ஆணை சென்றதென்பர்.
போராழி - ஆஞ்ஞா சக்கரம். பருதியின் இரத்ததின் ஆழி; ஆழி - தேர் உருளை. பொருப்பாழியில் - சக்கரவாள கிரியில். புலம்பை - தனிமையை; புலம்பு செய்ய - வருத்த; தனிமையைப் போக்கியதென்றபடி. அம்பிகையின் ஆட்சிகாறும் சூரியன் தேரின் ஒற்றையாழி தனியே சக்கரவாளகிரியைச் சுற்றியதெனவும், அம்பிகையின் ஆட்சியில் அவளது ஆஞ்ஞா சக்கரமும் உடன் செல்லுதலினால் தனிமையை யொழிந்த தெனவும் கூறினார். கதிரவன் தேர்ச் சக்கரமும் ஆஞ்ஞா சக்கரமும் உலகு முழுவதும் நடப்பதில் ஒத்தன வென்றவாறு; இதனை, “குலநேமி ரவிபோல வலநேமி தனிகோலு குலதீபனே, நிலனேமி பொலனேமி யளவாக வுககோடி நெடிதாளவே” (தக்க. 2) என்பதனாலும் உணரலாகும். (பி - ம்.) ‘திரிபுலம்பப் புலம்பு செய்ய’.
(4) செழியர் - பாண்டியர்
52, ( சந்தக்குழிப்பு ) தனதன தனதன தனதன தனதன தத்தன தத்தனன.
பலாப்பழத்தின் தேனும் கமுகம்பாளையின் தேனும் பாய்ந்து நிறைந்த தடாகத்தின் நீரையிண்ட களிறு முழங்க, அதனெதிர் மேகம் முழங்க, அவ்விரண்டன் முழக்கத்தினும் இருமடங்குமிக மும்முரசம் மதுரையில் அதிருமென்பர்.
அடி, 1) பரு அரை - பருத்த அடிமரம். குடக்கனி - குடம் போன்ற பலாப்பழம். படும் நறை - உண்டாகும் தேன். படுநிறை கடம் - கள் நிறைந்த குடம். கடுப்ப - ஒப்ப. உவட்டெழ - பெருக்கெடுப்ப.
|