பக்கம் எண் :

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்71

விரிதலை முதலொடு விளைபுல முலையவு
   ழக்கிய முட்சுறவின்
விசையினின் வழிநறை மிடறொடி கமுகின்வி
   ழுக்குலை நெக்குகவும்

கரையெறி புணரியி னிருமடி பெருகுத
   டத்தும டுத்தகடக்
களிறொடு பிளிறிட விகலிய முகிலினி
   ரட்டியி ரட்டியமும்

முரசதிர் கடிநகர் மதுரையில் வளர்கிளி
   முத்தம ளித்தருளே
முழுதுல குடையவொர் கவுரியர் குலமணி
   முத்தம ளித்தருளே.        
(9)

53.
புதையிருள் கிழிதர வெழுதரு பருதிவ
   ளைத்தக டற்புவியிற்
பொதுவற வடிமைசெய் திடுவழி யடியர்பொ
   ருட்டலர் வட்டணையிற்

றதைமலர் பொதுளிய களியளி குமிறுகு    
   ழற்றிரு வைத்தவளச்    
சததள முளரியின் வனிதையை யுதவுக    
   டைக்கண்ம டப்பிடியே

    (2) விரிதலை முதல் - நெல்லும் கரும்புமாகிய பயிர்கள். முள்ளையுடைய சுறா மீன். நறை - கள். நறை நெக்கு உகவும்.

    (3) தடத்து - தடாகத்தில். இரட்டி இரட்டிய - இரு மடங்கு ஒலித்த.

    (3-4) மும்முரசு - வீரமுரசு, தியாகமுரசு, மணமுரசு என்பன. (புறநா. 58: 12, உரை.) (பி-ம்.)‘கடிமதில்’. கவுரியர் - பாண்டியர்.

    (முடிபு.) நறை உவட்டெழவும் வழிநறை உகவும் இருமடி பெருகுதடத்தில் மடுத்த களிறொடு பிளிறிட இகலிய முகலின் இரட்டி இரட்டிய மும்முரசு அதிர் மதுரை.

    53. (அடி, 1) பருதி வளைத்த - சூரியனாற் சுற்றப்படும். பொதுவற அடிமை செய்திடு - வேறு ஒருவருக்கும் அடிமை செய்யாது அம்பிகைக்கே அடிமைத்திறம் பூணும்; “பொதுவினிற்றீர்த்தென்னை யாண்டோன்” (திருச்சிற். 146.) அலர் வட்டணை - தாமரை மலராகிய வட்ட அணை.

    (2) சததளம் - நூறு இதழ். வனிதை - கலைமகள். திருவையும் வனிதையையும் உதவு கடைக்கண். அம்பிகையின் வலக் கண்ணிற்