| பதுமமொ டொழுகொளி வளையுநி னளினமு | | கத்துமி டற்றுமுறப் | | பனிமதி யொடுசுவை யமுதமு நுதலொடு | | சொற்குத லைக்கணிறீஇ |
| முதுதமி ழுததியில் வருமொரு திருமகள் | | முத்தம ளித்தருளே | | முழுதுல குடையவொர் கவுரியர் குலமணி | | |
6. வருகைப் பருவம்
ஆசிரிய விருத்தம் 54. | அஞ்சிலம் போலிட வரிக்குரற் கிண்கிணி | | அரற்றுசெஞ் சீறடிபெயர்த் | | தடியிடுந் தொறுநின் னலத்தகச் சுவடுபட் | | டம்புவி யரம்பையர்கடம் |
றிருமகளும் இடக்கண்ணிற் கலைமகளும் உதித்தனரென்பர்; “திருமகள் வலக்கண் வாக்கின் சேயிழை யிடக்கண் ஞானப். பெருமக ணுதற்கணாகப் பெற்றுவான் செல்வங் கல்வி, அருமைவீ டளிப்பாள் யாவ ளவள்” (திருவிளை. 19 : 2.)
(1-2) அடயர் பொருட்டுத் திருவையும் கலைமகளையும் உதவும் மடப்பிடி. அம்பிகையின் அடியார்கள் திருவையும் கல்வியையும் பெறுவரென்றபடி.
(3-4) அம்பிகையைத் திருமகளாக உருவகம் செய்கின்றார்.
பதுமம் - பத்ம நிதி. வளை - சங்க நிதி. இவை முறையே முகத்திலும் கழுத்திலும் உற்றன. திருமுகத்திற்குத் தாமரையும் கழுத்திற்குச் சங்கும் உவமை கூறும் மரபை நினைந்து இங்ஙனம் அமைத்தார். மதி நுதற்கு உவமை. அமுதம் சொல்லுக்கு உவமை. தமிழ் உததி - தமிழ்க் கடல்.
திருமகள் பாற்கடலில் தோற்றிய பொழுது பத்மநிதி, சங்கநிதி. சந்திரன், அமுதம் முதலியன எழுந்தனவாதலின் இங்கே அவற்றில் ஒவ்வொன்றற்கும் ஒவ்வோருறுப்பைக் கூறினார். தனித்தனியே எழுந்த அவற்றைத் தன் திருமேனியின் உறுப்பாகவே கொண்டெழுந்தாளென்பது ஒரு நயம். குலமணி: விளி.
54. (அடி, 1) சிலம்பு ஓலிட, அரிக்குரலை - தவளை போன்ற குரலையுடைய. அலத்தகச் சுவடு - செம்பஞ்சுக் குழம்பின் அடையாளம். அம்புவியில்.
|