| மஞ்சுதுஞ் சளகத் திளம்பிறையு மெந்தைகுடி | | வளரிளம் பிறையுநாற | | மணிநூ புரத்தவிழு மென்குரற் கோவசையும் | | மடநடைக் கோதொடர்ந்துன் |
| செஞ்சிலம் படிபற்று தெய்வப் குழாத்தினொடு | | சிறையோதி மம்பினசெலச் | | சிற்றிடைக் கொல்கிமணி மேகலை யிரங்கத் | | திருக்கோயி லெனவெனெஞ்சக் |
| கஞ்சமுஞ் செஞ்சொற் றமிழ்க்கூட லுங்கொண்ட | | காமர்பூங் கொடிவருகவே | | கற்பகா டவியிற் கடம்பா டவிப்பொலி | | |
55. | குண்டுபடு பேரகழி வயிறுளைந் தீன்றபைங் | | கோதையும் மதுரமொழுகும் | | கொழிதமிழ்ப் பனுவற் றுறைப்படியு மடைநடைக் | | கூந்தலம் பிடியுமறுகால் |
(1-2) அளகத்து இளம்பிறை - கூந்தலில் அணியும் பிறையென்னும் ஆபரணம். எந்தை - சிவபெருமான். நாற - தோன்ற. அம்பிகையின் திருவடிகளில், பக்தியினால் வணங்கிய அரம்பையர் தலையணியாலும், ஊடலைநீக்கும்பொருட்டு வணங்கிய சிவபெருமான் திருமுடியிலுள்ள பிறையினாலும் உண்டான அடையாளங்கள் பாதச்சுவட்டிலும் தோற்றின. நூபுரம் - சிலம்பு.
(3) (பி-ம்.) ‘தெய்வக் குழாத்தொடுஞ்’.
(2-3) சிலம்பொலிக்கு அன்னத்தின் ஒலியை உவமை கூறுவர். அன்னம் சிலம்பொலியைத் தம் இனத்தின் ஒலியென்று நினைத்தும், அம்பிகையின் நடையைக் கற்பதற்கெணியும் தொடர்ந்தது.
(4) கற்பகாடவியின் - கற்பகச்சோலையிலிருத்தலைப் போல. கடம்பாடவி - மதுரை. தேவி அமிர்தக்கடலின் இடையேயுள்ள மணித்தீவில் கறபகச் சோலையினிடையே திருக்கோயில் கொண்டுள்ளாளென்பது நூற்றுணிபு. இதனைச் சியாமளாதண்டகம், தக்கயாகப்பரணி முதலியவற்றால் உணரலாம்.
(முடிபு.) அம்புவியில், பிறை இரண்டும் நாற, தெய்வக் குழாத்தினொடு ஓதிமம் பின்செல, மேகலை இரங்க வருக.
55. (அடி, 1) குண்டு - பள்ளம், பேரகழி - இங்கே பாற்கடல் (64.) பைங்கோதை - திருமகள். தமிழ்ப் பனுவற்றுறைப் படியும் பிடி - கலைமகள்.
|