| வண்டுபடு முண்டக மனைக்குடி புகச்சிவ | | மணங்கமழ விண்டதொண்டர் | | மானதத் தடமலர்ப் பொற்கோயில் குடிகொண்ட | | மாணிக்க வல்லிவில்வேள் |
| துண்டுபடு மதிநுதற் றோகையொடு மளவில்பல | | தொல்லுரு வெடுத்தமர்செயும் | | தொடுசிலை யெனக்ககன முகடுமுட் டிப்பூந் | | துணர்த்தலை வணங்கிநிற்கும் |
| கண்டுபடு கன்னல்பைங் காடுபடு கூடற் | | கலாபமா மயில்வருகவே | | கற்பகா டவியிற் கடம்பா டவிப்பொலி | | |
56. | முயல்பாய் மதிக்குழவி தவழ்சூ லடிப்பலவின் | | முட்பொதி குடக்கனியொடு | | முடவுத் தடந்தாழை முப்புடைக் கனிசிந்த | | மோதிநீ ருண்டிருண்ட |
(2) முண்டகமன் - செந்தாமரையும் வெண்டாமரையுமாகிய வீடுகள். விண்ட - மலர்ந்த. மானதத் தடமலர்ப் பொற்கோயில் - மனமாகிய பெரிய தாமரை மலராகிய அழகிய கோயிலில்; “என்னெஞ்சக் கஞ்சமுஞ் செஞ்சொற் றமிழக்கூட லுங்கொண்ட காமர் பூங்கொடி” என்றார் முன்னைப் பாட்டிலும் மாணிக்கவல்லி: விளி. வில்வேள் - காமன்.
(1-2) திருமகளும் கலைமகளும் வெறுந்தாமரைமலரிற் குடிபுக நீ சிவமணம் கமழும் அடியால் இதயமாகிய தாமரைமலரிற் புகுவாயென்று பாராட்டினார்.
(3) தோகை - இரதி. சிலை - வில்.
(4) கண்டுபடு கன்னல் - கற்கண்டு உண்டாவதற்குக் காரணமான கரும்பு; எழுவாய். காடுபடு - காட்டைப்போல உண்டாகும்; “கரும்பல்லது காடறியாப், பெருந்தண்பணை” (புறநா. 16 : 15-6); “கரும்பலாற் காடொன் றில்லாக் கழனிசூழ் பழன நாடும்” (சீவக. 2902.)
(3-4) மதுரையிலுள்ள கருப்பங்காடு மன்மதன் பல்வேறு உருவம் எடுத்து இரதியுடன் சேர்ந்து அமர் செய்வதற்கு உதவும் விற்களைப் போல வளர்வதென்றார்.
56. இச்செய்யுளில் கயல்மீனின் செயல் கூறப்படும்.
(அடி, 1) சூல் அடிப்பலவு - ஈரப்பலா; சூல் - கருப்பம் (52) குடக்கனி - குடம்போன்ற பழம். முடவு - வளைவு. தாழை முப்புடைக் கனி - தேங்காய்.
|