தனிப் பிரபந்தங்களின் பிரதிகள் கந்தர் கலிவெண்பா;பாண்டித்துரைத் தேவரவர்கள் பிரதி.
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்; (1) சோடசாவதானம் சுப்பராய செட்டியாரவர்கள் பிரதி, (2) கவுண்டன்பாளையம் நரிப் புலவரவர்கள் பிரதி, (3) திருநெல்வேலி ஈசுவரமூர்த்திக் கவிராயரவர்கள் பிரதி, (4) தலையநல்லூர் குமாரசாமிக் கவிராசர் குமாரர் பிரதி.
நீதிநெறி விளக்கம்; மதுரை இராமசாமிப் பிள்ளையவர்கள் பிரதி.
பண்டார மும்மணிக்கோவை; திருக்கைலாய பரம்பரைத் திருவாவடுதுறை யாதீனத்துப் பிரதி.
முத்துக்குமாரசுவாமிப் பிள்ளைத்தமிழ்; மதுரை ஸ்ரீ திருஞான சம்பந்த சுவாமிகளாதீனத்துப் பிரதி.
சிதம்பரச் செய்யுட்கோவை; ஸ்ரீ தியாகராச செட்டியாரவர்கள் பிரதி.
காசிக் கலம்பகம்; திருநெல்வேலி, திருவம்பலத் தின்னமுதம் பிள்ளையவர்கள் பிரதி.
ஸ்ரீ காசிமடம் எனக்கு ஏறக்குறைய 60 வருஷங்களாகப் பழக்கமுள்ள இடம். இப்போதுள்ள தலைவரகள் விசேஷ அன்பு காட்டி வருவதோடு என்னுடைய வேறு நூற்பதிப்புக்களுக்கும் அவ்வப்போது பொருளுதவி செய்து வருதலைக் குறித்தும் இப்பதிப்பின் விஷயத்தில் எனக்கு உண்டான பொருட்செலவு முழுவதையும் உதவியது குறித்தும் நான் மிகவும் நன்றி பாராட்டுகின்றேன். எனது நூலாராய்ச்சி விஷயத்தில் எழுதுதல், ஒப்பு நோக்குதல் முதலிய உதவி செய்பவர்களின் பொருட்டு எனக்கு ஏற்படும் செலவையும் சில மாதங்களாக இவர்கள் உதவி வருவது பின்னும் எனக்கு ஊக்கத்தை யளிக்கின்றது.
இவர்களுடைய பொருளுதவியாற் பலர் வாயிலாகப் பலவகைத் தமிழ் நூல்கள் வெளிவந்திருத்தலைத் தமிழுலகம் நன்கு அறியும். தமிழ்மொழிப் பயிற்சியின் அபிவிருத்தி ஒன்றனையே கருதி வருஷந்தோறும் சென்னைச் சருவகலாசாலைத் தனித்தமிழ் வித்துவான் பரீட்சையில முதல் வகுப்பில்
|