16தனிச் செய்யுட்கள்

தனிச் செய்யுட்கள்

    சில கையெழுத்துப் பிரதிகளில் சில செய்யுட்கள் தனியே காணப்படுகின்றன. அவை வருமாறு;

(கட்டளைக்கலித்துறை)
 
பூதங் கடந்த புகழ்க்கூடற்
சம்பந்தன் போதித்தசொல்
வாதங் கடந்து மனோலய
மாயிந்து மண்டலம்போய்
நாதங் கடந்து நடுவெளி
தாண்டி நலஞ்சிறந்த
போதங் கடந்தின்ப பூரண
மாகிப் பொலிந்ததுவே.
(1)
காட்டிருந் தாலு மலையிருந்
தாலுங் கருதரிய
நாட்டிருந் தாலு நமக்கென்ன
காணல்ல தோர்கமலை
    வீட்டிருந் தாண்டருள் ஞானப்ர
காசன் விரைமலர்த்தாள்
கேட்டிருந் தாலும் பிறவா
நெறிவந்து கிட்டிடுமே.
(2)
இவையிரண்டும் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் இயற்றியனவென்று கூறுவர்.
(நேரிசையாசிரியப்பா)
செந்நெல்லுங் கன்னலுஞ் சேருமெய்த் தருமை
நன்னகர் வருசிவ ஞான தேசிகன்
பொன்னடி யிணைமலர் போற்றுதும்
மன்னுபே ரின்ப வாழ்வுபெறற் பொருட்டே.
(1)
இது சென்ற சுக்கிலஹ வருஷம் மாசி மாதம் திருமயிலைச் சுப்பராய ஞானியாரால் பதிப்பிக்கப்பெற்ற பண்டாரமும்மணிக்கோவை அச்சுப் பிரதியிற் காணப்படுகின்றது.
(நேரிசை வெண்பா)
வந்த வினையும் வருகின்ற வல்வினையும்
கந்தனென்று சொல்லக் கலங்குமே-செந்தினகர்ச்
சேவகா வென்று திருநீ றணிவார்க்கு
மேவ்வா ராதே வினை.
(1)
இச் செய்யுள் கந்தர்கலிவெண்பா ஏட்டுப்பிரதி ஒன்றின் ஈற்றிலே காணப்பட்டது.
(நேரிசை வெண்பா)
ஆட லறுபத்டு நாலுடையா ரம்புயப்பொன்
மேடையின்மே லேறி விளையாடும்-கூடல்