| திருமக ளகலாப் பரமவை குந்த |
| நன்னக ருதித்த செந்நெறிக் குரிசில் |
| ஐந்தெனும் பருவம் வந்துறு மளவும் |
| மழக்குண மொருவி மிழற்றிடாச் செம்மல் |
| செந்திலம் பதிவாழ் கந்தன தருளால் |
| ஓதா துணர்ந்த போதனாய் முன்னர்க் |
| கலிவெண் பாவெனு மொலிபெறு மலங்கலக் |
| *குகன்றிரு முடிதனக் குகந்திடச் சூட்டிப் |
| பிள்ளைக் கவிமுதல் வெள்ளைக் கிழத்தி |
| மாலையீ றாகச் சால்பமை பிரபந்தம் |
| **முந்நான் கியற்றித் தன்னாஞ் சமய |
| நிலையையுங் காட்டி யுலைவிலா தியாரும |
் | தீதெலா மொருவி நீதியே புரிய |
| நீதிநெறி விளக்கமென் றேதமில் பனுவலும் |
| இயற்றின னில்லறந் தியக்குறு நிலையென |
| இளமையிற் றுறந்து வளமைசேர் தருமை |
| மாசிலா மணியெனுந் தேசுறு குரவன் |
| பதமலர் பழுச்சுமற் புதகுண குமர |
| குருபர னெனும்பெயர் மருவிய முனியே |