ஸ்ரீ குமரகுருபரசுவாமிகள் சரித்திரச் சுருக்கம்19

ஸ்ரீ குமரகுருபரசுவாமிகள் சரித்திரச் சுருக்கம்

ஒன்பது கைலாசங்களும் ஒன்பது திருப்பதிகளும் தன் கரையில் அமையப்பெற்ற தாமிரபரணி நதியின் வடகரையில் ஸ்ரீவைகுண்டமென்று வழங்கும் திருப்பதியின் வடபாலில் ஸ்ரீகைலாசமென ஒருபகுதி உண்டு. அங்கே பரம்பரையாகத் தமிழ்ப்புலமையும் முருகக்கடவுளது பக்தியும் வாய்ந்த சைவ வேளாள குலத்தில் சண்முகசிகாமணிக் கவிராயரென்ற ஒருவர் தம் மனைவியாரான சிவகாமசுந்தரியம்மையாரோடு வாழ்ந்து வந்தார். அவ்விருவருக்கும் ஓர் ஆண் குழந்தை உதித்தது. அதற்குக் குமரகுருபரன் என்னும் பெயர் சூட்டி அவர்கள் வளர்த்து வருவாராயினர்.

குமரகுருபரர் ஐந்தாண்டுவரையிற் பேச்சின்றி ஊமை போல இருந்து வந்தனர். அது கண்டு நடுங்கிய பெற்றோர்கள் அவரைத் திருச்செந்தூருக்கு எடுத்துச் சென்று செந்திலாண்டவர் சந்நிதியிலே வளர்த்திவிட்டுத் தாமும் பாடுகிடந்தனர். முருகவேள் திருவருளால் குமரகுருபரர் பேசும் ஆற்றல் பெற்றுக் கல்வியிலும் சிறப்புற்றனர். செந்திற்பெருமான் திருவருளால் வாக்குப்பெற்ற இவர். அப்பெருமான் விஷயமாக கந்தர் பலிவெண்பா என்ற பிரபந்தத்தைப் பாடனார். அப்பால் தம் ஊரிலெழுந்தருளியுள்ள ஸ்ரீ கைலாசநாதர் மீது கைலைக் கலம்பகம் என ஒரு பிரபந்தம் இயற்றினார். இவருக்குக் குமாரசுவாமிக் கவிராயரென ஒரு தம்பியார் இருந்தனர்.

குமரகுருபரர் தமிழ் இலக்கண இலக்கியங்களையும் ஞான சாத்திரங்களையும் திருவருளால் விரைவில் கற்றுத்தேர்ந்தார். மருவுக்கு வாசனை வாய்த்தாற்போன்று பக்திஞான வைராக்கியங்கள் இவரிடத்தே உண்டாகி வளரத் தொடங்கின. அப்பால் பல சிவதலங்களுக்கும் சென்று சிவதரிசனம் செய்யத் தொடங்கினர். மதுரையிலே சிலகாலம் தங்கியிருந்தார். அப்போது ஸ்ரீ மீனாட்சியம்மையின் திறத்து ஒரு பிள்ளைத்தமிழ் பாடி அக்காலத்தில் மதுரையில் அரசாண்டிருந்த திருமலை நாயக்கர் முன்னிலையில் அரங்கேற்றினார். அதனை அரங்கேற்றுகையில் ஸ்ரீ மீனாட்சியம்மையே குழந்தையுருவாக எழுந்தருளி வந்து