அதில் முதற் செய்யுளில் காசிக்குச் செல்வதில் உளவாகும் துன்பங்களையும் சிதம்பரத்திற்குச் சென்று தரிசனம் செய்யும் எளிமையையும் “காசியினிறத்தனோக்கி” (451-ல் வரி 59) என்பது முதலிய அடிகளில் உணர்த்தியிருக்கின்றார். அவ்வடிகள், தம்மை ஆசிரியர் காசிக்குச் செல்லப்பணித்ததும் அதன் அருமையைத் தாம் விண்ணப்பித்துக் கொண்டபோது சிதம்பரவாசம் செய்யும்படி கட்டளை யிட்டதுமாகிய நிகழ்ச்சிகளின் நினைவிலிருந்து எழுந்தனவென்றே தோற்றுகின்றது.
சிவநேசச் செல்வர்களும் தமிழறிவுடையவர்களுமாகிய சில அன்பர்கள், “யாப்பருங்கலக் காரிகையில் காணப்படும் உதாரணச் செய்யுட்கள் பெரும்பாலும் ஜைனசமயச்சார்பு உடையனவாக விருத்தலின், அந்நூலின் இலக்கணங்களுக்கு உதாரணமாக ஸ்ரீநடராஜப்பெருமான் விஷயமான செய்யுட்களை இயற்றித்தர வேண்டும்” என்று பிரார்த்திக்க இவர் அங்ஙனமே சிதம்பரச் செய்யுட்கோவை யென்னும் பிரபந்தத்தை இயற்றி அளித்தார்.
இவர் சிதம்பரத்தில் இருந்த காலத்திலேயே நீதிநெறி விளக்க மென்னும் நீதி நூலும் இயற்றப்பட்டிருத்தல் வேண்டுமென்று தோற்றுகின்றது. அந்நூலுக்குச் சிதம்பரம் நடராஜப் பெருமானது துதியை முதலிற் காப்பாக அமைத்திருத்தல் இதற்கு ஓர் ஆதாரமாகும்.*
திருமலைநாயக்கரது வேண்டுகோளின்படி மதுரையில் இருந்த பொழுதே இது பாடப் பெற்றதென்றும் கூறுவதுண்டு.
சிதம்பரத்தில் இங்ஙனம் வாழ்ந்துவந்த குமரகுருபரர் பின்பு தம் ஞான தேசிகர்பாற் சென்று தம்முடைய வேட்கையை மீட்டும் விண்ணப்பித்துக் கொண்டனர். இவருடைய பரிபக்குவத்தை யறிந்து ஞானதேசிகர் இவருக்குக் காஷாயம் உதவினர். அதுமுதல் இவர் குமரகுருபர முனிவரென வழங்க்ப் பெறுவாராயினர். அப்பொழுது தம் ஞான தேசிகர் விஷயமாகப் பண்டார மும்மணிக்கோவை யென்ற பிரபந்தம் ஒன்றை இயற்றினர்.
அப்பால் ஞான தேசிகரிடம் விடைபெற்றுக் காசிக்குச் சென்று தம்முடைய கல்வியறிவினாலும் தவப்பண்பினாலும் டில்லி பாதுஷாவின் உள்ளத்தைக்கவர்ந்தார். அப்பாதுஷாவின் தாய்மொழியாகிய ஹிந்துஸ்தானியை விரைவில் அறிந்துகொள்ள
* | திருமலைநாயக்கரது வேண்டுகோளின்படி மதுரையில் இருந்த பொழுதே இது பாடப் பெற்றதென்றும் கூறுவதுண்டு, |
|