22குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

வேண்டுமென்றெண்ணிச் சகலகலாவல்லி மாலையென்னும் பிரபந்தத்தை இயற்றிக் கலைமகளை வேண்டினார். கலைமகள் திருவருளால் அம்மொழியிலே சிறந்த அறிவு பெற்றுப் பாதுஷாவினிடம் பேசிப் பழகினார். அவர் இவர்பால் ஈடுபட்டு இவருடைய விருப்பத்தின்படியே இவர் காசியில் இருத்தற்குரிய மடம் அமைப்பதற்குக் கேதார கட்டத்தில் இடம் உதவினார். குமரகுருபரர் அதுகாறும் மறைபட்டிருந்த *ஸ்ரீவிசுவலிங்கப் பெருமானை வெளிப்படுத்தி அங்கே கோயில் முதலியன நிருமிக்கச் செய்து நித்திய நைமித்தியங்களும் குறைவறை நடக்கும்படி செய்தார்.

    குமரகுருபர முனிவர் காசியில் தங்கியிருந்த மடத்திற்குக் குமாரசாமி மடமென்று பெயர். அங்கே இவர் சிவயோகம் செய்துகொண்டு வாழ்ந்துவந்தார். அக்காலத்தில் காசித்துண்டி விநாயகர் பதிகமும் காசிக் கலம்பகமும் இவரால் இயற்றப்பெற்றன. இவர் தாம் வாழ்ந்திருந்த மடாலயத்தில் புராணசாலை ஒன்று ஏற்படுத்தி அங்கே ஹிந்துஸ்தானி பாஷையிலும் தமிழிலும் புராணப் பிரசங்கமும் செய்ததுண்டு. சிறந்த ராம்பக்தராகிய துளஸீதாஸர் அந்தப் பிரசங்கங்களைக் கேட்டு உவந்தனரென்றும், கம்பராமாயணத்திலுள்ள கருத்துக்களத் தாம் ஹிந்துஸ்தானியில் இயற்றிய இராமாயணத்தில் அமைத்துக் கொண்டனரென்றும் கூறுவர்.

    இவருடைய புலமைத்திறம் முதலியன இதன் பின்னுள்ள ஆராய்ச்சியினால் விளங்கும்.

    குமரகுருபரர் பின்னும் ஒருமுறை தரும்புரம் வந்து ஞானாசிரியரைத் தரிசித்து மீட்டும் காசிக்கே சென்று வாழ்ந்து விளங்கியிருந்து ஒரு வைகாசி மாதத்தில் கிருஷ்ணபக்ஷத் திருதியையிலே சிவபெருமான் திருவடி நீழலிற் கலந்தனர்.

பின் வந்தவர்கள்

    குமரகுருபரர் காலத்திற்குப் பின் (2) ஸ்ரீ காசிவாசி சொக்கநாத சுவாமிகள் என்பவர் குமாரசாமி மடத்தில்

 
 * 
கேதார கட்டத்திலுள்ள கேதாரலிங்கத்தை முகம்மதியர் மறைத் திருந்தனரென்றும் குமரமுருபர முனிவர் அம்மூரத்தியை வெளிப்படுத்தி ஆலய முதலியன கட்டுவித்து நித்திய நைமித்தியங்கள் நடத்தச் செய்தனரென்றும் இன்றும் ஆகம விதிப்படி தமிழ்நாட்டு முறையில் சில திருவிழாக்கள் அங்கே நிகழ்கின்றன வென்றும் சிலர் கூறுவர்.