இருந்து வந்தனர். அவருக்குப் பின் முறையே (3) ஸ்ரீகாசிவாசி அருணாசல சுவாமிகள் (4) ஸ்ரீகாசிவாசி அம்பலவாண சுவாமிகள்,(5) ஸ்ரீகாசிவாசி சடையப்ப சுவாமிகளென்பவர்களும் அப்பால் (6) ஸ்ரீகாசிவாசி தில்லைநாயக சுவாமிகளும் இருந்தனர்.
ஸ்ரீகாசிவாசி தில்லைநாயக சுவாமிகள் கி.பி.1756 வரையில் இருந்தனர். அவர் திருப்பனந்தாளில் கி.பி.1720-ல் ஒரு மடத்தை ஸ்தாபித்தனர். திருப்பனந்தாள் மடம் காசிமடத்தின் தொடர்புடையதாதலின் அதற்குத் காசிமடம் என்னும் பெயர் வழங்குகின்றது.
ஸ்ரீதில்லைநாயக சுவாமிகளுக்குப் பின் காசிமடத்துத் தலைவர்களாக விளங்கியவர்கள்:(7) ஸ்ரீகாசிவாசி குமரகுருபர சுவாமிகள் (8) ஸ்ரீகாசிவாசி சிதம்பரநாத சுவாமிகள் (9) ஸ்ரீகாசிவாசி சடையப்ப சுவாமிகள் (10) ஸ்ரீகாசிவாசி கணபதி சுவாமிகள் (11) ஸ்ரீகாசிவாசி இராமலிங்க சுவாமிகள் (12) ஸ்ரீகாசிவாசி சொக்கலிங்க சுவாமிகள் (13) ஸ்ரீகாசிவாசி கணபதி சுவாமிகள் (14) ஸ்ரீகாசிவாசி இராமலிங்கசுவாமிகள் (15) ஸ்ரீகாசிவாசி பொன்னம்பல சுவாமிகள் (16) ஸ்ரீகாசிவாசி சோமசுந்தர சுவாமிகள்(17) ஸ்ரீகாசிவாசி சொக்கலிங்க சுவாமிகள் (18) ஸ்ரீகாசிவாசி சொக்கலிங்க சுவாமிகள் (19) ஸ்ரீகாசிவாசி சாமியாத சுவாமிகள் என்பவர்கள்.
இப்போது ஸ்ரீகாசி மடத்தின் தலைவர்களாக எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி அருணந்தித் தம்பிரான் சுவாமிகள்அவர்கள்,26-3-1944-ல்ஸ்ரீகாசிமடத்தின்தலைமைஸ்தானத்தைஏற்றுஅதுமுதல்தமிழ்மொழி,தமிழிசை,சைவசித்தாந்தம் இவற்றின் ஆக்கங்கருதியும், பொதுஜன நன்மைகளை உத்தேசித்தும், அவ்வப்போது பல துறைகளில் மனமுவந்து பல அறச்செயல்கள் புரிந்துகொண்டும், திருப்பனந்தாளியே 1944 ஏப்பிரல் மாதத்தில், செந்தமிழ்க் கல்லூரி ஒன்றும் ஸ்ரீவைகுண்டத்திலும், ஆடுதுறையிலும், ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் கல்லூரியும், உயர்நிலைப்பள்ளிகளும், திருப்பனந்தாளில் ஸ்ரீ கைலைசுப்பிரமணிய தேசிக சுவாமிகள் உயர்நிலைப்பள்ளியும் அமைத்து வித்யா பரிபாலனம் செய்துகொண்டும் விளங்குகிறார்கள். அவர்களும் அவர்கள் செயல்களும் நீடு வாழ்க.
|