(206)
என்று தம் மனத்தையும் நாவையும் பாராட்டிக் கொள்கிறார்.
இங்ஙனம் தம் மனத்தையும் நாவையும் வாழ்த்திக் கொள்ளும் செயல் இவர் நெஞ்சத்தில் நிரம்பியுள்ள உவகையினால் வந்த பெருமிதத்தைக் காட்டுகின்றது. இராம்பிரான் வந்தனனென்ற செய்தியைப் பரதன் கேட்ட காலத்து அவன் செயல்களை வருணிக்க வந்த கம்பர்,
| “வேதியர் தமைத்தொழும் வேந்த ரைத்தொழும் |
| தாதியர் தமைத்தொழும் தன்னைத் தான்றொழும்” |
(மீட்சிப். 253)
என்று கூறுகின்றார். அவனுடைய உவகை தன்னைத்தான் பொழும் செய்கையில் உச்சநிலை பெற்று நிற்கின்றது. அங்ஙனமே தாம் பெற்ற தமிழ்ப்புலமையை நல்லாற்றினுய்த்துப் பாமாலை சூட்டி நின்றதனாற் பெற்ற உவகை தம் மனத்தையும் நாவையும் வாழ்த்தும்போது உச்சநிலையில் நிற்பதாயிற்று. மதுரைக் கலம்பக இறுதியிலே இவ்வடிகள் அமைந்துள்ளன. அக்கலம்பகமாலை சூட்டி நிறைவேறுஞ் செவ்வியில் அத்தகைய உள்ளநிறைவும் உவகையும் உண்டாதல் இயல்பேயாகும்.
தமிழினிடத்தே இம்முனிவர் தெய்வத்தன்மையைக் கண்டனர். அதனைத் தெய்வத்தமிழ் (49, 152) என்று பாராட்டுகின்றனர். தாம் பாராட்டும் தெய்வங்களையெல்லாம் தமிழ்த் தொடர்பும் தமிழின்பால் வேட்கையுமுடையவர்களாகக் கூறுகின்றனர். முத்தமிழுக்குச் சிவபெருமானே பயனாக உள்ளாரென்பது இவர் கொள்கை; “பண்முத் தமிழ்க்கொர் பயனே சவுந்தர பாண்டியனே” (149) என்பதைக் காண்க. ஸ்ரீமீனாட்சியம்மை, “முதுதமி ழுததியில் வருமொரு திருமகள்” (53) என்றும், “நறைபழுத்த துறைத்தீந் தமிழினொழுகுநறுஞ் சுவையே” (62) என்றும் சிறப்பிப்பார். முருக்க் கடவுளை, “சங்கத் தமிழின் றலைமைக் புலவா” என்றும், “தோலாத முத்தமிழ் நாவா” (378) என்றும். “தெளி