30குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

“இகபர மிரண்டினு மெதிர்நிறை கொளினும்”
(578)
என்பதில் எதிர்நிரனிறை என்னும் பொருள்கோளைப்பற்றிக் கூறுகின்றார்;
    வழக்கு இருவகைப்படுமென்பதை,

“உலகியல் வழக்கும் புளனெறி வழக்குமென்
 றிருவகை வழக்கினும்”
(451)
என்று உணர்த்துவர்.

அகப்பொருளிலக்கண வமைதி

    அகப்பொருளிலக்கணச் செய்திகளை எடுத்தாள்வதிலும் அவ்விலக்கண அமைதிபெறச் செய்யுளமைப்பதிலும் இவர் மிக வல்லவர். இந்நூலுள் வரும் அகத்துறைச் செய்யுட்கள் இதனை நன்கு விளக்கும்.

    அகத்திணைக்குரிய முதற்பெருளிரண்டனுள் ஒன்றாகிய நிலம் ஐவகைப்படும். குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தலென்னும் அவை ஐந்தும் தத்தமக்குரிய கருப்பொருள்களோடு நூல்களில் உணர்த்தப்பெறும். இப்பிரபந்தங்களில் அங்கங்கே சில நிலங்களையும் அவற்றன் கருப்பொருள்களையும் பற்றிய செய்திகளைக் காணலாம்.

    தனிப்பத்தி மலையும் மலையைச் சார்ந்த இடங்களும் குறிஞ்சியாகும்; அதற்கு முருகக் கடவுள் தெய்வமென்பது தமிழர் மரபு; இவ்வாசிரியர் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழில் குறிஞ்சி நிலத்தை வருணித்து அதற்கு முருகன் தலைவனாதலை உணர்த்துவர்;

“திண்ணென் றடக்கைவெஞ் சிலைவேடர் குடிகொண்ட
சீறூரு மூரூர்தொறுஞ்
செந்தினைப் புனமூடு தண்சாரல் பிறவுமாஞ்
சீதனக் காணிபெற்றத்
தண்ணென் குறிஞ்சித் தலந்தலை யளிப்பவன்”
(384)
என்பது காண்க.
வயலும் வயலைச் சார்ந்த இடங்களும் மருதநிலமாகும். இவ்வாசிரியர் பிரபந்தங்கள் பாட எடுத்துக்கொண்ட தலங்களுட் பெரும்பாலான மருத நிலத்தில் அமைந்தவை, ஆதலின், இச்செய்யுட்களில் அந்நிலவருணனை மிகுதியாக்க் காணப்படும். சில இடங்களில் அந்நிலங்களை மருதமென்னும் பெயராலே குறிப்பர்.