(454)
என்று பாராட்டுகின்றார்.
தலைவனும் தலைவியும் ஒத்த அறிவு அழகு முதலியன உடையராதல் வேண்டுமென்பது அகப்பொருளிலக்கண வரையறை. இதனை இவ்வாசிரியர் பண்டார மும்மணிக்கோவையில் ஒரு செய்யுளில் எடுத்தாளுகின்றார். ஞானாசிரியரைத் தலைவராகவும் அடியாரைத் தலைவியாகவும் உருவகம் செய்தவர் தம் புலமை யாற்றல் தோன்ற அவ்விருவருக்கும் ஒப்புமை கூறுகின்றார் (572). சிவத்துக்கும் சீவனுக்கும் இவ்வாறு ஒப்புமை கூறியபின்,
| “முழுவது மொவ்வா தொழியினு மொழிக |
| உயர்ந்தோன் றலைவ னொத்தோட் புணரிலும் |
| இழிந்தோட் புணரினு மிழிபெனப் படாதே” |
என்றுரைக்கின்றனர்.
இச்செய்திகள்,
| “ஒன்றே வேறே யென்றிரு பால்வயின் |
| ஒன்றி யுயர்ந்த பால தாணையின் |
| ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப |
| மிக்கோ னாயினுங் கடிவரை யின்றே” |
(தொல். களவு. 2)
என்னும் இலக்கணத்தை நினைந்து கூறியவை. பின்னும் சிவத்தோடு கலந்து உயிர்கள் நுகரும் நுகர்ச்சியைத் தலைவன் தலைவியர் இணைந்து இன்புறும் நுகர்ச்சிகாயக உருவகம் செய்வர். அகத் துறைச்செய்தியையும் சைவசித்தாந்தக் கருத்தையும் இணைத்து இவ்வாசிரியர் பாடியுள்ள இப்பகுதி