ஆராய்ச்சி33

இவரது புலமைத்திறத்தையும் சைவசித்தாந்த நூற்பயிற்சியையும் ஒருங்கே விளக்குகின்றது.

    தலைவனும் தலைவியும் எதிர்படுங் காலத்து அவர்கள் நெஞ்சம் ஒன்றுபடுதலை உள்ளப் புணர்ச்சி என்பர். தடாதகைப் பிராட்டியார் திக்குவிசயம் செய்த காலத்தில் திருக்கயிலாயத்தில் சிவபெருமானைக் கண்டமாத்திரத்தில் அப்பிராட்டியாருக்குத் திரு மார்பிலிருந்த மூன்றாவது நகில் மறைந்த செய்தியை, காதலரோடு உள்ளப் புணர்ச்சி செய்யும் கருத்தால் உள்ளே ஒடுங்கியதென்று இவ்வாசிரியர் கற்பிக்கின்றார்.

“பொய்வந்த நுண்ணிடை நுடங்கக் கொடுஞ்சிப்
பொலந்தேரொ டமரகத்துப்
பொன்மேரு வில்லியை யெதிர்ப்பட்ட ஞான்றம்மை
பொம்மன்முலை மூன்றிலொன்று
கைவந்த கொழுநரொடு முள்ளப் புணர்ச்சிக்
கருத்தா னகத்தொடுங்க”
(35)
உள்ளப் புணர்ச்சியென்னும் தொடரைப் பிறிதோரிடத்தில்,

“வெள்ளப் புணர்ச்சியின் வேட்கையுள் ளடக்கி
உள்ளப் புணர்ச்சிய ளூடின ணிற்பது”
(344)
என்று ஆளுகின்றார்.
மடலூர்வோர் செஞ்சடை விரித்தும் வெண்பொடி பூசியும் எருக்கங்கண்ணி சூடியும் வருதல் வழக்கம். உமாதேவியாரைப் பிரிந்த சிவபெருமான் இயற்கைத் திருக்கோலங்கொண்டு வீற்றிருக்கையில் இவை காணப்படுதலின் அக்காட்சி மடலூர் குறிப்பைப் புலப்படுத்துமென்பர் (332). தலைவியைப் பெறாதோர் மடலூர்வரென்னும் செய்தியும் அங்ஙனம் ஊருவோர் செய்யும் செயல்களும் இப்பகுதியில் அமைந்துள்ளன.

தலைவனது புறத்தொழுக்கத்தில் அவனோடு தொடர்பு பெறும் மகளிர் சேரிப்பரத்தை, காதற்பரத்தை, காமக்கிழத்தி என்னும் மூவகையினரென்று அகப்பொருளிலக்கணம் கூறும். இவ்வாசிரியர் தலைவியாக ஞானத்தையும் அத்தலைவியைப் பெறாமல் இடைநின்று கவரும் சேரிப்பரத்தையாக ஆணவத்தையும் காமக் கிழத்தியராகச் சுத்தவித்தை முதலியவற்றையும் உருவகம் செய்கின்றார் (478).

அகப்பொருட் செய்திகள்

    இவர் செய்யுட்களில் தலைவன் கூற்று, தலைவி கூற்று, தோழி கூற்று, செவிலிகூற்று என்னும் கூற்றுவகைகள் பயின்று