34குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

வரும். பாட்டுடைத் தலைவன் வேறாகவும் கிளவித்தலைவன் வேறாகவும் அமைந்துள்ள அகத்துறைச் செய்யுட்களும், காட்டுடைத் தலைவனையே கிளவித்தலைவனாக அமைத்துள்ள புறப் பொருட் பாடாண்டிணைச் செய்யுட்களும் இவருடைய பிரபந்தங்களில் விரவிவந்துள்ளன.

    இவ்வகைச் செய்யுட்களிற் பெரும்பாலான தலைவன் பிரிவினால் வருந்தும் தலைவியின் விரகதாபத்தை விரிப்பனவாகவே உள்ளன. அகப்பொருட் செய்திகளை அப்படியப்படியே கூறாமல் சொன்னயம் பொருள்நயம் பொருந்தக் கூறுவது இவர் இயல்பு. அவற்றுள் அகப்பொருட் சிறப்பும் சொற்பொருளணியமைதியும் அவ்வத் தலச் செய்திகளுக்கேற்ற கற்பனைகளும் சமற்காரமாக இயைக்கப்பெற்றிருத்தலைக் காணலாம்.

    தலைவியைக் கண்டு அவளழகில் ஈடுபட்ட தலைவன் அவளது குறிப்புப் பார்வையை உணர்ந்து மகிழ்கின்றான். இத்துறை குறிப்பறிதல் என வழங்கும் இத்துறைச் செய்யுள் மூன்று இப்பிரபந்தங்களில் வந்துள்ளன. மூன்றும் கைக்கிளைக் கெனவே யமைந்த மருட்பாவாக உள்ளன. அம்மூன்றிலும் தலைவன் தலைவியினது கண்ணைக் கடலாக உவமிக்கின்றான். உண்ணமிர்தம் நஞ்சோடு உதவலால் அக்கடலை அருட்பார்வையையும் மருட் பார்வையையும் உடைய கண்களுக்கு உவமை கூறுகின்றான்.

    இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் தலைவியை அவள் ஆயத்துட் செல்லச் செய்தபின் அவள் செல்லும் செலவு கண்டு உளத்தொடு சொல்லுவதாக அமைந்தது பின்வருஞ்செய்யுள்;

“கரிய கண்டங் கரந்தவோர் . . . . . . னாவியே”
(168)
    இதன்கண் தலைவியை உயிரெனக் கூறப்புகும் தலைவன் உயிர் அருவமென்பாரை மறுப்பான் போல அச்செய்தியைச் செப்பவைத்தார். இது

“காணா மரபிற் றுயிரென மொழிவோர்
நாணிலர் மன்ற பொய்ம்மொழிந் தனரே
யாஅங் காண்டுமெம் மரும்பெற லுயிரே
சொல்லு மாடு மென்மெல வியலும்
கணைக்கா னுணுகிய நுசுப்பின்
மழைக்கண் மாதர் பணைப்பெருந் தோட்டே”