ஆராய்ச்சி35

என்னும் பழம்பாட்டின் சுருக்கமாக விளங்குகின்றது. தலைவன் தலைவியின் நலம் பாராட்டலும் (492), பாங்கனுக்குத் தலைவியினது இயலிடம் கூறுதலும்(116), தலைவியை முன்னினுலையாக்கித் தன்னிலை கூறுதலும் (144, 176),மடலேறுவ னென்றலும், (175) பொருள்முற்றி மீளும் தலைவன் இடைச்சுரத்தில் தலைவியின் உருவெளிப்பாடு கண்டு கூறுதலும் (188), மேகத்தோடு கூறுதலும் (165) பாகனொடுரைத்தலும் (201), பள்ளியிடத் தழுங்கலும் (120, 335) ஆகிய தலைவன் கூற்றுக்கள் இச்செய்யுட்களிற் பயின்றுள்ளன.

    தலைவனது வரவை எதிர்நோக்கித் தலைவி கூடற்சுழி யிழைத்துப் பாரத்தல் (125) , ஒரு செய்யுளிலும், மடலேறுவதாகக் கூறுதல் (137) ஒரு செய்யுளிலும், பரத்தையிற் பிரிந்த தலைவனிடமிருந்து வந்த பானனை நோக்கிக் கூறுதல்(178). ஒரு செய்யுளிலும் சொல்லப்பெறுகின்றன.

    தலைவனை நகுதலும் (177), தலைவியை மணஞ்செய்து கொள்வீராக வென்றும், மடலேறப்புகின் அவளது அவயவ மெழுதவரி தென்றும், தலைவி கையுறை யேற்றாளென்றும் தலைவன்பாற் கூறுவனவுமாகிய கூற்றுக்களை (121, 198, 645) யன்றித் தோழி கூற்றாக உள்ள பிற யாவும் தலைவியின் விரகதாபத்தைப் பலபடியாக வெளிப்படுத்துவனவாம்.

    தலைவியின் விரகதாப நிலையைப்பற்றிய விரிவான செய்திகளை இப்பிரபந்தங்களிற் காணலாம். அவள் பிறைகண்டு அஞ்சுதலும், மன்மதனுக்கு அஞ்சுதலும், குயில் முதலியவற்றிறி அஞ்சுதலும், பருவங்கண்டு அஞ்சுதலும், ஊணின்றியும் துயிலின்றியும் வாடுதலும், அழுதலும், பசலைமிகுதலும், தூது விடுத்தலும், பிறவும் அங்கங்கே பல்வேறு சுவைபெறப் புலப்படுத்தப் பெறுகின்றன.

கண்வழி யுளம்புகுங் கள்வன்

    தலைவனைக் கண்டமாத்திரத்தில் தலைவியின் நெஞ்சம் அவன்பால் ஈடுபடுகின்றது. அதனால் அவள் காமநோய் பெற்று வருந்துகிறாள். இச்செய்தியை,

“கடம்ப வனேசனார், கண்பு குந்தென் கருத்து ளிருக்கவும்”
(113),
“இல்லொன் றெனவென் னிதயம் புக்காய்”
(667)
என்று தலைவியே கூறுகின்றாள்.