(143)
என்று அறிவிக்கின்றாள்.
மற்றொரு தலைவி தன் தாயோடு சென்று சொக்கநாதரைத் தரிசித்து மயலுழந்ததை ஒரு தோழி கூறுகின்றாள் (195).
இங்ஙனமே, ‘அம்பொன்மணி மதிற்றில்லை நடராசன் அணி மறுகிற், செம்பொன்மணிப் பொலந்திண்டேர்த் திருவுலாப் போதுங்கால்’ சென்று தரிசித்த தலைவி யொருத்தி மயலுழந்த செய்தியை ஒரு செவிலி கூறிப் புலம்புகின்றாள் (538, 542). இவை உலாவென்னும் பிரபந்த அமைப்பை நினைப்பூட்டுகின்றன.
மாலையிளம் பிறையைத் தலைவியும் தோழியும் செவிலியும் கூடி எத்தனை குறை கூறுகிறார்கள்! ஒரு தலைவி, “இந்தச் சந்திரன் ஒரு யமன். இவன் என் உயிரை வாங்குகிறான். மதுரேசர் என் கருத்தில் இருந்தும் இந்தத் துன்பம் விட்டபாடில்லை. இந்த ஊரிலே நீதி சற்றும் இல்லை. சீசீ! இனி இங்கே இருத்தலொண்ணாது; தோழிகளே புறப்படுங்கள்” (113) என்று கூறுகின்றாள். செவிலித் தாயும் இளம்பிறைக்