(675).
(192)
என்று உரைக்கின்றாள்.
ஒரு தலைவிக்குப் பிறை நெருப்பாகத் தோற்றுகின்றது; “இறைவன்பாற் பூண்ட மயலால் உயிர்போன உடம்பு போலத் திரிகின்றார்கள் சிலர்; அவர்கள் வெந்துவிழ இரவில் இந்த அக்கினி புகையில்லாமல் நின்று எரிகின்றதே”(202)என்று அவள் இரங்குகின்றாள். “தீநிலா வனல்சிந்துமால்” (203) என்று தோழியும், “குடதிசை புகையெழ வழலுமிழ் நிலவு” (182) என்று செவிலியும் சந்திரனை வெறுப்பர்.
ஒரு தலைவிக்குச் சந்திரன் இறைவனது இடக்கண்ணாக இருத்தல் ஞாபகத்திற்கு வருகின்றது. அவள், “இறைவன் நுதற்கண்ணும் இடது பக்கத்திலுள்ள விழியாகிய சந்தரனும் வெண்ணெருப்பேயாம். ஒன்று காமனைஎரித்தது. மற்றொன்று அப்பொழுது தப்பி ஓடிவந்த அவன் படையினரென்றெண்ணி எங்களைக் காய்கின்றது” (626) என்று கற்பிக்கின்றான்.மற்றொருத்திக்கோ, “நல்ல வேளையாக இறைவனுக்கு ஒரு கண்மாத்திரம் சந்திரனாக இருக்கிறது; எங்களுக்குப் பகையாகிய காமனையும் இரவையும் முறையே ஒழிக்கும் அக்கினிக்கண்ணும் சூரியனாகிய கண்ணும் உடன் இருப்பதனால் நாங்கள் உயிரோடிருக்கின்றோம். அந்த மூன்று கண்களும் சந்திரனாகவே இருந்து விட்டாற் பிறகு இந்த உலகில் மகளிர்க்கு உய்வு ஏது!” (498) என்ற நினைவு உண்டாகின்றது.
காமநோயால் வாடும் மடந்தையொருத்தி நிலாவை மன்மதனது அம்பினாலுண்டான புண்ணலேயிட்ட கனலாகவுணரந்து மறுகுகின்றாள்;
| “சிலகணை மதன்வழங்க வவைபோய்......தரிதே” |
(138)
இவள் கூறும் பசும்புண்ணுக்கு வெண்ணிலாவைக் காரச் சீலையாகக் கூறுகின்றாள் ஒரு தோழி (145),