38குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

தியாகப்பெருமான்பால் மால்கொண்ட மங்கையொருத்தி பாதி மதியை விடமாகக் கண்டு வெருவுகின்றாள்; உடனே அப்பெருமானை நோக்கி,

“வீதிவிடங் காவடங்கா வேலைவிடம் போலுமதிப் பாதிவிடங் கா”
(309)
என்று வேண்டுகின்றாள். அன்றெழுந்த விடமுழுதும் உண்டு தேவருக்கு இன்பஞ்செய்த பெருமான் இந்தப் பாதிவிடத்திற்கும் ஏதேனும் பரிகாரம் செய்தல் கூடுமென்பது அவள் கருத்துப் போலும்!

    இவள் மதிக்கு விடத்தை வெறும் உவமையாக மாத்திரம் கூறினாள்; காசிப்பிரான்பாற் கருத்தூன்றிய தலைவி யொருத்தியோ பிறையை முன் பாற்கடலில் எழுந்த விடத்தின் மாறு வேட மென்றே சொல்லுகின்றாள்.

“மறைக்கோலங் கொண்டவகிலேசரே .... கனல்விடமே”
(605).

மன்மதோபாலம்பனம்

    சந்திரனை வெறுத்துக் கூறும் சந்திரோபாலனச் செய்யுட்களைப் போலவே மன்மதோபாலம்பனச் செய்யுட்களும் மிக்க சுவை யுடையனவாகும்.

    காசிப்பிரான்பால் ஈடுபட்ட தலைவி யொருத்தி காமன் கணைக்கு இலக்காகி வருந்துகின்றாள்; காமநோய் தாங்காமல் அவள் அவனை நோக்கி, “இவ்விடம் என்றிரான் படைவீடென்பதை நீ உணரவில்லையோ? ஏன் எம்மைச் சூழ்ந்தாய்? உன்னை முன்னரே எரித்த அன்ற்கண்ணையும் பகைவரை ஒழிக்கும் மழுப்படையையும் அவர் உடையார்” (648) என்று இயம்புகின்றாள்,

    இறைவன் படைவீட்டைத் தன் இடமாக ஆக்கிக்கொண்ட மன்மதனது ஆண்மையையும், அதனால் தாம் கொண்ட அச்சத்தையும் ஒரு தோழி,

“ஆர்க்கும் .... சுரைப்பாரார்”
(613)
என்று வெளியிடுகின்றாள்.
    மன்மதன் இங்ஙனம் ஆண்மை செய்யவும் அதனை விலக்காதிருக்கும் இறைவனது ஆண்மையை எள்ளி நகையாடிகின்றாள் ஒரு நங்கை: