(694).
(681)
என்பது தலைவி கூற்று. மென்மைக்கு இருப்பிடமாகிய பூவையே வில்லாகவும் அம்பாகவும் உடையவன், அங்கமில்லாதவன்; இங்ஙனம் இருப்பவும் அவன் பல மகளிரைத் துன்புறுத்துகின்றானென்று அவள் இரங்குகின்றாள்.
இங்ஙனம் போரக்குரிய கருவியாற் குறைபாடுடையவன் தன் ஆண்மை செலுத்தற்குக் காரணம் அவனது தவமென்பதை உணர்ந்த செவிலி, “இதுதான் தவம்!” என்று வியக்கின்றாள்.
| “சிலையோ...........தெனாம்” |
(187);
இவையிரண்டும் உறுப்புக்குறை விசேட வணியாகும்.
உலகில் துன்புறுவோர் ஒருவர் மற்றொருவர் வருத்தமுருவதைக் காணும்போது தமக்குள்ளதைப் போன்ற துன்பமே அவருக்கும் உள்ளதாக்க் கருதுதல் இயல்பு. ஒரு மங்கை காமனது அம்பாற் புண்பட்டுத் துன்புறுபவள் சந்திரனை நோக்கி அதன் மெய்யிற் களங்கத்தைக் கண்டாள்; ‘ இந்தக் களங்கம் மன்மதனது அம்பால் உண்டான புண்போலும்’ என்று கருதினாள். ஆயினும் மன்மதன் அதனை யெய்வதற்குக் காரணம் இல்லையே என்று யோசித்த அவளுக்கு ஒரு காரணம் தோற்றியது; “மன்மதன் எம் ஆவியை எய்து அழித்தற்கு முன் சந்திரனை இலக்காக்க் கொண்டு எய்து பழகினான். அப்போது உண்டான புண்ணே களங்கமாக விளங்குகின்றது”. (659) என்று அதனை அவள் வெளியிடுகின்றாள்.
தலைவி மாலைப்பொழுதாலும், நிலவாலும், காமனாலும் வருந்துவதன்றி, குயிலாலும் விடைமணியாலும் மகளிர் கூறும் பழிமொழியாலும,் தென்றலாலும், பிற பொருள்களாலும் வருந்துவதைப் பலபடியாக வெவ்வேறு முறையில் தலைவியும் செவிலியும் தோழியும் வெளிப்படுத்துகின்றார்கள். இவ்வாறு