(109)
நாம் அவள் முறையீட்டைக் கேட்கும் பொறுமையுடையோமாயின் அந்த ஒரு கோடிக் கூற்றையும் வரிசையாகச் சொல்லிவிடும் வேகத்தில் அமைந்தருக்கிறது இச்செய்யுள்.
தலைவனது அருளை எதிர்நோக்கி வருந்தும் தலைமகளது மெய்ப்பாடுகளை அங்கங்கே காணலாம். அவள் துயிலிழந்து பசலை பூத்து வாடுகின்றாள்; மயக்கத்தால் பிறர் நகைத்தற்குரிய செயல்களைச் செய்கின்றாள்; ஊணை வெறுக்கின்றாள்; உடல் மெலிய அவளது வளைகள் நழுவிகின்றன; செயலற்று உயிர் நீங்கும் நிலையிற் கிடக்கின்றாள்; இறைவனது மாலை பெற்றால் அவள் உய்வாளென்று யாவரும் கூறுகின்றனர்.
தலைவனது கூட்டத்தைப் பெறுதற்கு அடையாளமாக அவனது மாலையை விரும்புதல் தலைவியின் இயற்கை பிரபந்தங்களில் இச்செய்தி மிகுதியாக்க் காணப்பெறும்.
சிவபெருமானது மாலையை ஒரு தலைவி வேண்டி நிற்கின்றாள்; அவளுடைய தோழி, “சண்டேசருக்கல்லாமல் அம்மாலை பிறர் கொள வரிது” (542,639) என்று கூறுகின்றான். அவளைத் தலைவி முனிந்து பகைநோக்களிக்கின்றாள் (542); “அம்மாலையைப் பெறும் சண்டேசர் தவம் பெரிதுபோலும்!” என வியக்கின்றாள்;
| “மலர்த்தாமம் ...........ளெறிந்தார்க்கே” |
(118).
இறைவனது கருணையினால் வண்டுகூட அவன் அணிந்த மாலையில் மொய்க்குமென்று அறிந்தவளாதலின் தான் பெறுதற்கரிய மாலையை அவ்வண்டு பெறுதற்குப் பெருந்தவம் செய்திருக்க வேண்டுமென்று நினைந்து,
| “மின்றிரண்ட தெனப்புரளும் பொலங்கடுக்கைத்.....புகலு வீரே” |
(652)
என்று தன் தோழியரை நோக்கி வினாவுகின்றாள்.
பிரிவால் வருந்தும் மகளிருக்கு மேனியழகு கெடப் பசலை உண்டாகுமென்பர்; இதனைப் பசலைபாய்த லென்னும் மெய்ப்பாடாக அமைப்பர் தொல்காப்பியர் (தொல். மெய்ப்