ஆராய்ச்சி41

பாடு.22) பசலை பொன்னிறமுடையது. தலைவியால் விரும்பப்படும் கொன்றை மாலையும் பொன்னிறமுடையது; இவ்வொப்புமையால், “ நான் பொன்னிறமுள்ள கொன்றை மாலையையே நினைந்திருத்தலின் நானும் பொன்னிறமுற்றேன்” (507) என்று தலைவி பசலையுண்டானமையைக் கூறுகின்றான். இதனையே கொன்றையானது தலைவிக்குச் சாரூபந் தந்ததென்று செவிலியும்     (552).

“செம்பொ னிதழித்...........பைங்கிளிக்கே”
(662)
என்று தோழியும் உணர்த்துகின்றனர்.
    மற்றொரு தலைவி காமமயக்கத்தால் உள்ளங்கலங்கித் தன்பால் உண்டான பசலையையே இறைவனது கொன்றைமாலையாக நினைந்து உவக்கின்றாள்;

“...................கமலைப் பதியுளாக்...................மடவாள்”
(343)
என்று இச்செய்தியைத் தோழி வெளியிடுகின்றாள்.
    பசி தன்னை வருத்தவும் தலைவி உணவு கொள்ளாளாகி வருந்துகின்றாள்; இது பசியட நிற்றலென்னும் மெய்ப்பாடு அவளது நிலையை,

“உண்பது நஞ்சமால்”
(129)
“அயிலா ளன்னமுமே”
(163)
“உண்ணஞ் சனத்துக்கு மஞ்ச வைத்தார்”
(674)
“தையற் கனமே தீவிடமே”
(696)
என்று தோழி கூறுகின்றாள்.
    இவ்வாறு தான் உண்ணும்படி வைத்த உணவை நஞ்சமென்று பிறர் கூறுவதைக் கேட்டபோது இறைவனுக்கு நஞ்சம் அமுதாகுமென்ற செய்தி நினைவுக்கு வரவே, ‘அப்படியாயின் அவருண்ட நஞ்சத்தை நாமும் உண்ணவேண்டும்’ என்று எண்ணி உணவை விழுங்குகின்றாள்; இடையே வேறொரு யோசனை வந்து விடுகின்றது; ‘நம்மனத்துள் தலைவர் இருக்கின்றார்; நாம் உண்ட எச்சிலை அவர் உண்ணுதல் தகாது’ என்று கருதி அதனை மீட்டும் உமிழ்ந்து விடுகின்றாள்     (343).

    உணவைவெறுத்ததலைவிஅதனால்உடல்மெலிகின்றாள்;வளைகள்கழல்கின்றன;இஃதுஉடம்புநனிசுருங்கலென்னும் மெய்ப்பாடு. இந்தநிலை,